தந்தைக்கும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை
பிரிட்டன் அரசு முடிவு
குழந்தையை
பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான
ஒன்று. ஆனால்
குழந்தையை பாதுகாக்கும்
பணி தந்தைக்கும்
இருப்பதால், இனி தந்தைக்கும் விடுமுறை அளிக்க
பிரிட்டன் அரசு
முடிவு செய்துள்ளது.
இம்முடிவு
நேற்று முதல்
அமலுக்கு வந்துள்ளது.
அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார
விடுமுறை அளிக்கப்பட்டு
வந்தது. இனி
வரும் காலங்களில்
இந்த விடுமுறையை
கணவன், மனைவி
இருவரும் சமமாக
பிரித்துக்கொள்ளலாம்.
அதாவது
கணவன் 25 வாரமும்,
மனைவி 25 வாரமும்
விடுமுறையை பிரித்துக்கொண்டு குழந்தையை
இருவரும் பராமரிக்கலாம்.
குழந்தையை தத்தெடுப்பவர்களும்
இந்த 50 வார
விடுமுறையை எடுத்துக்கொள்ளவும் அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
இனி
குழந்தையை பெற்றெடுத்த
தாய்க்கு விடுமுறை
அளிப்பது போல,
தந்தைக்கும் விடுமுறை அளிக்கப்பட்ட இந்த முடிவு
ஆண்களுக்கு மகிழ்ச்சியை தரும் என்று அந்நாட்டு
துணை பிரதமர்
நிக் க்ளெக்
கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment