‘கம்பெடுத்தவர்’களெல்லாம் தீர்மானித்து விட முடியாது
எனது முகாமிலேயே நான் இருக்கிறேன்
–
கே.எம்.ஏ ரஸ்ஸாக் ( ஜவாத்)
‘அமைச்சர் றிசாத்தின் கட்சியில் கல்முனை ஜவாத் இணைவு’
பாராளுமன்ற தேர்தலிலும் குதிப்பு’
எனும்
தலைப்பில், இணையத்தளமொன்றில் வெளியாகியுள்ள
செய்தியினைப் பார்க்கக் கிடைத்தது. அந்தச் செய்திக்கான பதிலாக
இதை எழுதுகிறேன்.
அரசியலில்
எனது இருப்புப்
பற்றியும், நான் இருக்க வேண்டிய முகாம்
எது என்பது
பற்றியும், நானே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
எனது பாதை
எது என்பதை,
‘கம்பெடுத்தவர்’களெல்லாம் தீர்மானித்து விட முடியாது.
ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசிலிருந்து
மாற வேண்டுமென்கிற
தேவை, இன்னும்
எனக்கு ஏற்படவில்லை.
ஆனால், மு.காங்கிரசிலிருந்து என்னை மாற்றி விட வேண்டுமென்கிற
தேவை – சிலருக்கு
உள்ளமை குறித்து,
நான் அறிவேன்.
அவ்வாறானவர்களின் தேவையைத்தான் அந்த இணையத்தளம் நிறைவு
செய்ய முயற்சித்திருக்கிறது.
எனது அரசியலை நான் ஒருபோதும் திருட்டுத்தனமாகச்
செய்ததில்லை.
அரசியலில், எனது பாதையினை மாற்றிக் கொள்ள
வேண்டுமென நான்
முடிவெடுத்தால், அதை மிக வெளிப்படையாகச் செய்வேன்.
ஊரைக் கூட்டிச்
சொல்வேன். ‘அந்த’ இணையத்தளம் மோப்பம் பிடிக்குமளவுக்கு
எனது அரசியல்
நடவடிக்கைகள் ஒரு போதும் இருக்காது.
முஸ்லிம்
காங்கிரசின் நல்லது கெட்டதுகளைப் பற்றிப் பேசுவதற்கான
உயர் பீடக்
கூட்டங்களில், கட்சியின் சில செயற்பாடுகள் குறித்து,
நான் விமர்சித்துப்
பேசுவதையெல்லாம் வைத்துக் கொண்டு, கட்சித் தலைமையுடன்
– நான் கத்திச்
சண்டை போடுவதாக,
சிலர் – சில
சித்திரங்களைத் தீட்டி வைத்துள்ளமை குறித்து நான்
அறிவேன். ஆனால்,
அவற்றையெல்லாம் – சில செய்தித் தளங்களும், தங்கள்
பக்கத்தில் எடுத்துப் போடுவதானது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடாகும்.
மு.காங்கிரசிலிருந்து நான் விலகவுள்ளதாக ‘அந்த’ இணையத்தளத்துக்கு
தகவல் கிடைத்திருந்தால்,
முதலில், அதை
– என்னிடம் கேட்டு உறுதிப்படுத்தியிருக்க
வேண்டும். அதை
விடுத்து, அவசரச்குடுக்கைத்
தனமாக, சினிமாக்
கிசுகிசுப் பாணியில் செய்திகளை எழுதுவதென்பது நல்ல
விடயமாகப் படவில்லை.
நான்
கட்சி மாறி
விட்டதாக வந்த
செய்தியைப் பார்த்து விட்டு, எனக்கு நெருக்கமான
பலர் – என்னைத்
தொடர்பு கொண்டு
விசாரிக்கின்றார்கள். அதனால்தான், எல்லோருக்குமான
பதிலாக இதை
எழுதுகிறேன்.
இருட்டில்
அரசியல் செய்ய
– எனக்குத் தெரியாது. எனது பேச்சும் நடத்தைகளும்
வெளிப்படையானவை. அரசியலும் அப்படித்தான். இன்னும் நான்
– எனது அரசியல்
முகாமிலேயே இருக்கிறேன். இப்படி ஜவாத்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment