கல்முனை பிரதேச மக்களுக்காக கலாநிதி எஸ்.எல்.றியாஸ்
ஆரம்பித்த  அடையாள உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கல்முனைப் பிரதேசத்தில் எந்த விதமான வேலைத்திட்டங்களும் உள்ளவாங்கப்படாமைழய கண்டித்து சமாதான கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை காலை (04.04.2015)) கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள கல்முனைக்குடி ஜீம்ஆப்பள்ளி வாசலுக்கு அருகாமையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
தற்போதைய அரசு வாக்குறுதியளித்த கல்முனை புதிய நகரத் தி்ட்டம் உடன் ஆரம்பிக்கப்பட வேண்டும், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக சுத்தமான சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் இன்றி இருக்கும் கல்முனைக்குடி பிரதேசத்திற்கான தனியான நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக சுத்தமான குடிநீர் கிடைக்க வழியேற்படுத்த வேண்டும், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென சவூதி அரேபிய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட நுரைச்சோலை வீடமைப்புத்திட்டம் பயனாளிகளிடம் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும், கல்முனையில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிப்புற்று தற்போது மீள்குடியேறி குடியிருப்புத்திட்டங்களில் வாழும் மக்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி அவர்களின் வீடுகளுக்கான உரிமை (உறுதிகள்) வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதத்திவைத்து அடையாள உண்ணாவிரதப் போராட்த்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி இது சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிப்பதாக உறுதியளித்ததுடன், இக்கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் கையளிக்கப்பட்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top