சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர்
சல்மான் பின் அப்துல் அஜீஸ் அதிரடி
சவூதி அரேபியாவுக்கு
புதிய பட்டத்து
இளவரசரை மன்னர்
சல்மான் பின்
அப்துல் அஜீஸ்
நியமித்துள்ளார்.
மன்னர்
அப்துல்லா மரணத்தை
அடுத்து புதிய
மன்னராக பொறுப்பேற்றுக்
கொண்ட சல்மான்
பின் அப்துல்
அஜீஸ், நேற்று
தனது அமைச்சரவையில்
பல்வேறு மாற்றங்களை
செய்துள்ளார்.
அதில்,
பட்டத்து இளவரசராக
இருந்து வந்த
மோக்ரன் பின்
அப்துல் அஜீஸ்
(69) நீக்கப்பட்டு, புதிய இளவரசராக
உள்துறை அமைச்சராக
இருந்து வந்த
முகம்மது
பின் நயீப்
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மன்னர்
சல்மானின் சகோதரர்
மகன்.
இதுமட்டுமின்றி,
அப்துல் அஜீஸ்
தற்போது வகித்து
வரும் துணைப்
பிரதமர் பதவியிலிருந்தும்
நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப்
பதிலாக, பட்டத்து
இளவரசராக அறிவிக்கப்பட்டுள்ள
முகம்மது
பின் நயேஃப்
துணைப் பிரதமராக
நியமிக்கப்பட்டுள்ளார்.
துணைப்
பிரதமர் பொறுப்புடன்,
முகம்மது
பின் நயேஃப்
தற்போது வகித்து
வரும் உள்துறை
அமைச்சர் பொறுப்பையும்,
அரசியல், பாதுகாப்பு
கவுன்சில் தலைவர்
பதவியையும் அவரே தொடர்ந்து கவனிப்பார் என
மன்னர் சல்மானின்
அரசவை செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னர்
வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், அவரது மகன்
முகம்மது
பின் சல்மானை
இரண்டாம் நிலை
பட்டத்து இளவரசராக
நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைஞரான
முகம்மது
பின் சல்மான்,
பாதுகாப்பு அமைச்சராக தற்போது பதவி வகித்து
வருகிறார்.
ஏமனில்
ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு
எதிரான இராணுவ நடவடிக்கையை முன்னின்று
நடத்தி வரும்
அவர், தொடர்ந்து
பாதுகாப்பு அமைச்சராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
பட்டத்து இளவரசர்
பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் அஜீஸ், சவூதி
அரேபியாவைத் தோற்றுவித்த அப்துல் அஜீஸ் சவூதின்
கடைசி மகன்
ஆவார்.
அப்துல்
அஜீஸின் மேல்
கொண்டிருந்த நம்பிக்கை காரணமாக, அவரை இரண்டாம்
நிலை பட்டத்து
இளவரசராக முன்னாள்
மன்னர் அப்துல்லா
கடந்த ஆண்டு
மார்ச் மாதம்
அறிவித்தார்.
சவூதி
அரேபியாவில், பட்டத்து இளவரசருக்கு அடுத்த நிலையில்
ஒருவர் அறிவிக்கப்பட்டது
அதுவே முதல்
முறை.
பட்டத்து
இளவரசராக முகம்மது பின்
நயேஃப் நியமிக்கப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து, சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தின்
சுதாய்ரி கிளை,
நாட்டில் முழு
ஆதிக்கத்தைச் செலுத்தும் எனக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment