முழுமையாக முகத்தை மூடும் தலைகவசம் அணியும் சட்டம்
மே மாதம் வரை ஒத்திவைப்பு


முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைக்கவசம் அணியும் சட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்து அந்த தடைச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த சட்டம் கடந்த மார்ச் 21ஆம் திகதி அமுல்படுத்தப்படவிருந்த நிலையில், பொதுமக்கள் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால், பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய அத்திட்டத்தை அமுல்படுத்துவது நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் இந்த சட்டம் இன்று 02ஆம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் இது மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முழுமையாக முகத்தை மறைக்கும் தலை கவச தடைக்கு எதிராக, மாத்தறையில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.
மாத்தறை இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தனர்.
குறித்த தடையின் மூலம், தமது உயிருக்கு ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகத்தை முழுமையாக மூடிய தலைகவச தடையானது தேசிய பிரச்சினையாக மாறியிருப்பதன் காரணமாக இதனை மனித உரிமை ஆணைக்குழு தலைமையகத்திற்கு அனுப்ப உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top