ஆந்திராவில் செம்மரக்
கடத்தல்காரர்கள் மீது
பொலிஸார் துப்பாக்கிச் சூடு 20 பேர்
பலி
இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலம் சித்தூரில்
செம்மரங்களை வெட்டியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்
சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 12 பேர்
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
திருப்பதியில்
உள்ள சேஷாசலம்
வனப்பகுதியில் ஸ்ரீவாரிமெட்டு எனும் இடத்திலிருந்து விலைமதிப்பு
மிக்க செம்மரங்கள்
நாள்தோறும் கடத்தப்படுகின்றன.
இதனைத்
தடுக்க ஆந்திர
காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் தினமும் தீவிர
வாகன சோதனைகளில்
ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மலையேறும்
பயிற்சி பெற்ற
ஆயுதப்படை காவலர்கள்,
சிறப்பு காவல்
படையினர் வனப்பகுதிகளில்
தேடுதல் வேட்டைகளில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,
இன்று காலை
நடந்த என்கவுன்டரில்
தமிழகத்தை சேர்ந்த
தொழிலாளர்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர்.
செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர பொலிஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் கருணாநிதி, இப்பிரச்சினையில் இரு மாநில அரசுகள் மீதும் குறைகூறியுள்ளார்
செம்மரங்களை வெட்டியதாக 12 தமிழர்கள் உட்பட 20 பேர் ஆந்திர பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஆந்திர வனப்பகுதியில் தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment