கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் கல்வித் தரம் எங்கே?
க.பொ.த. சாதாரணதரப் பரீ்ட்சை முடிவுகள் பேசுகின்றன



அண்மையில் வெளியிடப்பட்ட  .பொ.. சாதாரணதரப் பரீ்ட்சை முடிவுகளின் பிரகாரம் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் 11 மாணவிகள் 9 பாடங்களிலும்” ஏ சித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியில் 4 மாணவர்கள் மாத்திரமே 9  பாடங்களிலும் சித்தி பெற்றிருக்கிறார்கள்.
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழிமுலம் 7 மாணவிகளும் ஆங்கில மொழிமுலம் 4 மாணவிகளுமாக மொத்தம் 11 மாணவிகள் 9 பாடங்களிலும் தமிழ் மொழி முலம் 16 மாணவிகளும் ஆங்கில மொழி முலம் 5 மாணவிகளுமாக 21 மாணவிகள் 8 பாடங்களிலும் 20 மாணவிகள் 7 பாடங்களிலும் ”ஏ சித்தி பெற்றுள்ளதுடன் உயர்தரம் கற்க 235 மாணவிகள் தகுதி பெற்றுள்ளனர்.
கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் 9 பாடங்களிலும் 6 மாணவர்கள் 8 பாடங்களிலும் 5 மாணவர்கள் 7 பாடங்களிலும் 7 மாணவர்கள் 6 பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளதுடன் மொத்தமாக 180 மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
கல்முனை வலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் அகில இலங்கை ரீதியாக முஸ்லிம் பாடசாலைகளுள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான மாணவிகளை  உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளமை வரலாற்றில் இது முதற் தடவையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சித்தி
மஹ்முத் மகளிர் கல்லூரி
ஸாஹிறா தேசியக் கல்லூரி
9 பாடங்களில்
11 மாணவிகள்
04 மாணவர்கள்
8 பாடங்களில்
21 மாணவிகள்
06 மாணவர்கள்
7 பாடங்களில்
20 மாணவிகள்
05 மாணவர்கள்
உயர்தரம் கற்க தகுதி
235 மாணவிகள்
180 மாணவர்கள்

மேலே காட்டப்பட்டுள்ள புள்ளி விபரங்களைப் பார்க்கும்போது கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையை விட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகள்  சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை 1949.11.16 ல் ஆரம்பிக்கப்பட்டது.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி 1971.01.01 ல் இப்பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. ( இப்பாடசாலை 1965.08.01 ல் அல் - அமான் வித்தியாலயம் என்ற பெயரில் இயங்கியது )
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் எம்.எச்.நவாஸ், பகுதித் தலைவர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு  மக்கள் விருப்பத்தின் பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
கடந்த காலங்களில் பல சாதனைகள் படைத்த கல்முனை ஸாஹிறாவின் கல்வித்தரத்தை உயர்த்த பிரதேச மக்கள் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும் என்பதே மக்கள் விருப்பமாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top