உலகின் தலைசிறந்த மனிதர்களில்
மறைந்த தென்னாப்பிரிக்கஜனாதிபதி
நெல்சன் மண்டேலாவுக்கு1ஆவது இடம்
உலகின்
தலைசிறந்த மனிதர்கள்
குறித்து, உலகப்
பொருளாதார மன்றம்
(டபிள்யூஇஎஃப்) நடத்திய கருத்துக்கணிப்பில், மறைந்த தென்னாப்பிரிக்க
ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 20.1 சதவீத வாக்குகளுடன்
முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 10-ஆவது இடத்தையும் மகாத்மா
காந்தி 4-ஆம்
இடத்தையும் பெற்றுள்ளனர்.
உலக அளவில் 125 நாடுகளைச்
சேர்ந்த 285 நகரங்களில், 20 முதல் 30 வயதுக்குள்பட்ட 1,084 இளைஞர்களிடம், இந்த ஆண்டுக்கான உலகின்
தலைசிறந்த மனிதர்கள்
குறித்து, உலகப்
பொருளாதார மன்றம்
அண்மையில் கருத்துக்கணிப்பு
நடத்தியது.
இந்தக் கருத்துக்கணிப்பில். மறைந்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன்
மண்டேலா 20.1 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தையும், 12.4 சதவீதம் வாக்குகளை பெற்று மகாத்மா
காந்தி 4-ஆவது
இடத்தையும், 3 சதவீத வாக்குகளை பெற்று, பிரதமர் நரேந்திர
மோடி 10-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
போப் பிரான்ஸில்
2-ஆவது இடத்தையும்,
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 5-ஆம்
இடத்தையும் அமெரிக்க அதிபர் ஒபாமா 7-ஆவது
இடத்தையும், அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃபே
11-ஆவது இடத்தையும்
பிடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment