கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு கருவூலம்
திமுக தலைவர் கருணாநிதி புகழாரம்

கவிஞர் அப்துல்ரகுமான் ஒரு கருவூலம் என்றும், தமிழின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர் என்றும் திமுக தலைவர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.
அப்துல் ரகுமானின் இரு நாள் பவள விழா சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா நேற்று 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், "கவிக்கோ கருவூலம்' என்ற நூலை கருணாநிதி வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். விழாவில் கருணாநிதி பேசியதாவது:
 எனது இளம்பருவத்தில் வாணியம்பாடியில் நடைபெற்ற கவியரங்கில் அப்துல் ரகுமானோடு எனக்கு நட்பு ஏற்பட்டது. அன்று தொடங்கிய அப்துல் ரகுமான் மீதான கவர்ச்சியும் அன்பும், இன்றும் எனக்குத் தொடர்கிறது. அப்துல் ரகுமான் ஒரு கருவூலம். அதைத் தெரிந்தே கவிக்கோ கருவூலம் என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது.
 அண்ணாவைப் பற்றி "விழுந்தாலும் விதைபோல விழுவார்என்று ஒரு கவிதையில் கூறினார்அதை என்றைக்கும் என்னால் மறக்க முடியாதுதனக்குக் கிடைத்த புகழ் எல்லாம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று கருதியவர்தமிழ்ப் பற்றும்இனப்பற்றும் கொண்டவர்எல்லோருக்கும் புரியும் வகையில் கவிதை எழுதக்கூடிய அற்புதமான கவிஞர்.வைரமுத்துஎங்கள் எல்லோரையும்விட சிறந்த கவிஞர் அப்துல் ரகுமான்பகுதி நேர கவிஞர் இல்லைகூட்டுப்புழு பட்டுப்புழு ஆவது போல முழு நேர கவிஞர்கவியரங்கின் பாதையே அவரால்தான் மாறியதுஇங்கு இல்லாமல் வெளிநாட்டில் அவர் இருந்தால்உலக அளவில் புகழையும் விருதுகளைப் பெற்றிருப்பார்.
கவிக்கோ அப்துல்ரகுமானை நீண்ட காலமாக நான் அறிவேன். வாணியம்பாடியில் நடைபெற்ற ஒரு கவியரங்கத்துக்கு நான் அழைக்கப்பட்டு இருந்தேன். அவரும் அங்கு வந்திருந்தார். அன்று முதல் இன்று வரை, இனியும் நான் இருக்கும் வரை, அவரை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அப்படிப்பட்ட கவிஞர் அப்துல்ரகுமான். அவரைப்பற்றி, நான் உங்களிடம் அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதராக, பாசமுள்ள மனிதராக என்னிடம் பழகி வருகிறார்.

கவியரங்கத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகளை நான் என்றும் மறக்கமாட்டேன். தமிழ் கவிஞர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதல் வரிசையில் அப்துல்ரகுமான் இடம்பெற்று இருப்பார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வாளர் அவர். நன்றி மறவாத நண்பராக இன்றும் விளங்கி வருகிறார். இவ்வாறு கருணாநிதி பேசியுள்ளார்.


"கவிக்கோ கருவூலம்' நூலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. உடன் (இடமிருந்து) ரஹ்மத் பதிப்பகம் பதிப்பாளர் எம்.ஏ.முஸ்தபா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஏ.ஷாஜகான், மலேசியா செய்யது இப்ராஹிம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கவிக்கோ அப்துல் ரகுமான்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top