பசுவின் இறைச்சியை சாப்பிட்டதாக
அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு
நிவாரணத் தொகைரூ.45 இலட்சம் வழங்கப்படும் எனஅறிவிப்பு
இந்தியாவில் பசு மாட்டின் இறைச்சியை சமைத்து
சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்டவரின்
குடும்பத்திற்கு மொத்தம் 45 லட்சம் ரூபாய் நிதியுதவி
அளிப்பதாக இன்று
தெரிவித்திருக்கும் இந்திய உத்தரபிரதேச
மாநில முதல்-மந்திரி அகிலேஷ்
யாதவ், தேவைப்பட்ட
அரசுப் பணியும்
வழங்குவோம் எனவும் கூறியுள்ளார்.
டில்லியில்
இருந்து 56 கி.மீ. தொலைவில் பிசோதா
என்ற கிராமம்,
உ.பி.யின் கவுதம
புத்தர் மாவட்டம்,
தாத்ரி தாலுகாவில்
அமைந்துள்ளது. இங்கு ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பசுவை பலி
கொடுத்து அதன்
இறைச்சியை முகம்மது
இக்லாக் (58) என்பவர் உண்டு வருவதாக கடந்த
திங்கள்கிழமை இரவு வதந்தி ஒன்று பரவியது.
இதைதொடர்ந்து ஒரு கும்பல் இக்லாக் வீட்டுக்குள்
புகுந்து அங்கிருந்தவர்களை
தாக்கியது. இதில் இக்லாக் அதே இடத்தில்
உயிரிழந்தார். அவரது தாய் அஸ்கரி (70), மனைவி
இக்ராமன் (52), இளைய மகன் தானிஷ் (21), மகள்
ஷாஹிஸ்தா (16) ஆகியோர் காயம் அடைந்தனர். இதில்
படுகாயம் அடைந்த
தானிஷ் தீவிர
சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டார்.
இந்த
சம்பவத்தை தொடர்ந்து
அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் நூற்றுக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
இந்த
படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கடந்த 5 நாட்களாக
பொலிஸார்
தீவிரவமாக தேடி
வந்தனர். இதில்
முக்கிய குற்றவாளிகளான
மூவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
அக்லாப் குடும்பத்தினர்
மீது தாக்குதல்
நடத்துவதற்கு பொதுமக்களை திரட்டி சதித்திட்டம் தீட்டியவர்
விஷால் ராணா
தான் என்று
பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்
அக்லாப் குடும்பத்தினர்
உத்தரபிரதேசம் மாநில முதல்-மந்திரி அகிலேஷ்
யாதவை அவருடைய
வீட்டில் சந்தித்து
பேசினர். பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ்
யாதவ், பாதிக்கப்பட்டவர்களுக்கு
நாங்கள் உதவிசெய்வோம்,
அவர்களுக்கு தேவைப்பட்டால் அரசுபணி வழங்குவோம், என்று
கூறியுள்ளார்.
இக்லாக்கின்
குடும்பத்திற்கு மாநில அரசின் நிவாரணத் தொகையை
ரூ.30 லட்சமாக
உயர்த்தி வழங்கப்படும்
என்று அகிலேஷ்
யாதவ் அறிவித்துள்ளார். மேலும்,
இக்லாக்கின் 3 சகோதரர்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய்
நிவாரணத் தொகை
வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த
அறிவிப்புக்கு பின்னர், அக்லாப் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம்
பேசுகையில், ”எங்களுக்கு ஆதரவு அளித்த உத்தரப்பிரதேசம்
முதல்-மந்திரி
அகிலேஷ் யாதவிற்கு
நன்றியை தெரிவித்து
கொள்கிறோம். நீதி வழங்கப்படும் என்று நாங்கள்
நம்பிக்கை வைத்து
உள்ளோம்.” என்று
கூறியுள்ளனர்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிசோதா சென்று, இக்லாக் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கிராம மக்களிடமும் அவர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இக்லாக் குடும்பத்தினரை ராகுல் சந்திக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. "பிரதமர் மோடி தனது மெளனத்தை கலைக்க வேண்டும். தாத்ரி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் கோரியுள்ளது.
0 comments:
Post a Comment