காலைச் சாப்பாடு முகநூலில் பதிவேற்றம்
இது மக்களுக்கு அவசியம்தானா?
பலர் இரத்தங்கள் சிந்தி கடும் போராட்டங்களுக்கும்
தியாகங்களுக்கும் மத்தியில் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களினாலும்
ஏனையவர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதய தலைமை தான் காலைச் சாப்பாடு சாப்பிடுவதை முகநூலில்
பதிவேற்றம் செய்து கொண்டிருப்பது மக்களுக்கு அவசியம்தானா? இல்லை இது அழகாகத்தான்
இருக்கின்றதா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தனக்கு கிடைத்திருக்கும்
அதிகாரங்களைப் பாவித்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஏழை,எளிய மக்களுக்கு சேவை செய்வது பற்றி மற்றவர்கள் அறிந்து அமைச்சரைப் புகழ்ந்து முகநூலில் பதிவேற்றம் செய்வதைத்தான் மக்கள்
பார்க்கவேண்டுமே தவிர இப்படியான செயல்பாடுகள் முகநூலில் வருவதை மக்கள் விரும்பவில்லை
என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
கட்சிக்கு வாக்களித்த மக்கள் எமது
கட்சியின் தலைமை எளிமையாக சாப்பிடுவதாகக் காட்டும் புகைப்படங்களை முகநூலில்
காணவேண்டும் என்று ஆசைப்படவில்லை. அல்லலுற்றிருக்கும் ஏழை, எளிய மக்கள் தங்களின்
பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். ஒரு வேளையாவது சாப்பிட்டு நிரந்தரமான
வீடு ஒன்றில் நிம்மதியாக தூங்கவேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை
முஸ்லிம் தலைமைத்துவங்கள் உணர்ந்து செயல்படவேண்டும் என்பதே மக்களின்
விருப்பமாகும்.
0 comments:
Post a Comment