2015-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான
நோபல் பரிசு
2015-ம்
ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆங்கஸ் டிட்டனுக்கு
(வயது 69) அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்
நாட்டின் தலைநகர்
ஸ்டாக்ஹோமில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள்
அறிவிக்கப்பட்டு வருகிறது. அறிவியல் மற்றும் இலக்கியத்திற்கான
நோபல் பரிசுகள்
அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது,
2015-ம் ஆண்டின்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வு,
வறுமை, மக்கள்
நலம் தொடர்பான
ஆய்வுக் கட்டுரைகளை
வழங்கியதற்காக அவருக்கு இந்த நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிரின்ஸ்டென்
பல்கலைகழகத்தில் தற்போது ஆங்கஸ் பணியாற்றி வருகிறார்.
0 comments:
Post a Comment