சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை அமைக்கும் கோரிக்கை
ஏட்டிக்குப் போட்டியாக
முஸ்லிம் அமைச்சர்கள் நடவடிக்கை!
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை அமைக்கும் கோரிக்கை தொடர்பாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான
றிசாத் பதியுதீன் உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் தமது பாராளுமன்ற
உறுப்பினர்கள் அடங்களாகக் கோரிக்கை விடுத்துள்ளதை அடுத்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் பாராளுமன்ற
உறுப்பினர்கள் கல்முனை மாநகர சபைஉறுப்பினர்கள் அடங்கலான ஒரு குழு அமைச்சர் பைஸர் முஸ்தபாவைச் சந்தித்து கலந்துரையாடல் செய்திருப்பதாக
அறிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு தனியான பிரதேச
சபைகள் அமைக்கும் கோரிக்கை தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்
துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அமைச்சருக்கு தெரிவித்திருப்பதாவது,
சாய்ந்தமருது
உட்பட சில
பிரதேசங்களுக்கு புதிய உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துமாறு
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத்
துறை அமைச்சருமான
றிசாத் பதியுதீன்
உள்ளுராட்சி ,மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்
முஸ்தபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர்
பைஸர் முஸ்தபாவினை
அண்மையில் சந்தித்த
அமைச்சர் றிசாத்
பதியுதீன் தலைமையிலான
அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின்
பாராளுமன்ற உறுப்பினர்களான பிரதி அமைச்சர் அமீர்
அலி,பாராளுமன்ற
உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி,இஷாக் றஹ்மான்,மஹ்ருப் அப்துல்லா
ஆகியோர் கூட்டாக
இந்த வேண்டுகோளை
முன் வைத்துள்ளனர்.
அதேவேளை
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரிடத்தில் அமைச்சர்
ரிசாதினால் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில்
மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;
கிழக்கு
மாகாணத்தில் சாய்ந்தமதருதுக்கான தனியானதொரு
நகர சபையினை
ஏற்படுத்துவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த
நிலையில் கடந்த
தேர்தல் நேரத்தில்
அது இடை
நிறுத்தப்பட்டிருந்தது. இதனை உடனடியாக
நடை முறைப்படுத்த
வேண்டும்.
திருகோணமலை
மாவட்டத்தில் மூதுார் பிரதேச சபையினை நகர
சபையாகவும், தோப்பூருக்கான தனியான பிரதேச சபை
மற்றும் கூணித்தீவு,கட்டைப் பரிச்சான்,சம்பூர் ஆகிய
பிரதேசங்களை உள்ளடக்கியதாகக் கட்டைப்
பிரிச்சான் பிரதேச சபையாகவும் கந்தளாய் பிரதேச
சபையினை நகர
சபையாகவும் தரமுயர்த்த வேண்டும்.
முதலாம்,இரண்டாம் கொலனி,
அனைக்கட்டு, பொட்டண்காடு,ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக
அணைக்கட்டு பிரதேச சபையாகவும் குச்சவெளி பிரதேச
சபையினை புல்மோட்டை
மற்றும் குச்சவெளி
இரு பிரதேச
சபைகளாகவும் தரமுயர்த்த வேண்டும்.
வவுனியா
மாவட்டத்தில் வவுனியா நகர சபையினை மாநகர
சபையாகவும்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிறுப்பு
பிரதேச பையினை
புதுக்குடியிறுப்பு மற்றும் ஒட்டுச்
சுட்டான் பிரதேச
சபைகளாகவும்
புத்தளம்
மாவட்டத்தில் உள்ள கல்பிட்டி பிரதேச சபையினை
கல்பிட்டி மற்றும்
அக்கறைப்பற்றுக்கான தனியான இரு
பிரதேச சபைகளாகவும்
மட்டக்களப்பு
மாவட்டத்தில் கோரளைப்பற்று மத்தி. கோரளைப்பற்று கிழக்குக்கான
இரு பிரதேச
சபைகளாகவும் கோரளைப்பற்று மேற்கில் உள்ள 5 கிராம
அதிகாரி பிரிவுகள்
கோறளைப்பற்று கிழக்குடன் தற்காலிகமாக இணைகப்பட்டுள்ளதால் அதனை மீள கோறளைப்பற்று மேற்கு
பிரதேச சபையுடன்
இணைப்பதற்கான நடவடிக்கையினை எடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளதுடன்
மன்னார்
மாவட்டத்தில் உள்ள மன்னார் நகர சபையினை
மாநகர சபையாகவும்
மறிச்சுகட்டிக்கான தனியானதொரு பிரதேச
சபையினையும் உருவாக்குவதற்கான நடவடிக்கையினை
எடுப்பதன் அவசியம்
குறித்தும் அமைச்சர் றிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை அமைப்பது தொடர்பில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் உள்ளூராட்சி,
மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல்
அவரது அமைச்சில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனையில்
நடைபெற்ற ஐக்கிய
தேசிய முன்னணியின்
தேர்தல் பிரசாரக்
கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக
அறிவித்ததற்கேற்ப. இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது
இக்கலந்துரையாடலில்
அமைச்சர் ஹக்கீமுடன், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.
ஹரீஸ், பாராளுமன்ற
உறுப்பினர்களான எம்.எச்.எம். ஸல்மான்,
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், கல்முனை
பிரதி மேயர்
ஏ.எல்.
அப்துல் மஜீத்,
கல்முனை மாநகர
சபை உறுப்பினர்களான
எம்.ஐ.எம். பிர்தௌஸ்,
ஏ.ஏ.
பஸீர், ஏ.
நஸார்தீன், அமைச்சரின் ஹக்கீமின்
இணைப்புச் செயலாளர்
ரஹ்மத் மன்சூர் மற்றும்
உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் செயலாளர் ஆகியோரும்
கலந்துகொண்டனர்.
கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பது ஒலுவில் பிரதேச கடலரிப்பு, சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபை அமைக்கும் கோரிக்கை ஆகிய விடயங்களில் சரியாக
நிருபிக்கப்பட்டு வருகின்றது.
பாதிப்புக்களை பார்வையிடல், கடிதம் எழுதுதல், கலந்துரையாடல்
செய்தல் போன்றவற்றுடன் நின்றுவிடாமல் செயலில் காட்டவேண்டும் என்பதே மக்கள் விருப்பமாகும்.
0 comments:
Post a Comment