நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி
வித்யா தேவி பண்டாரி
நேபாள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யா தேவி பண்டாரி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குல் பகதூர் குருங்கை விட 113 வாக்கு கள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வித்யா தேவி பண்டாரி 327 வாக்குகளும், குல் பகதூர் குருங் 214 வாக்குகளும் பெற்றனர்.
0 comments:
Post a Comment