பயங்கர நிலநடுக்கம்
தெற்காசிய பகுதிகளில்
பலி எண்ணிக்கை
105 ஆக அதிகரிப்பு
ஆப்கானில் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக தெற்காசிய நாடுகளில் பலி எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானின் ஜார்ம் என்ற இடத்துக்கு தெற்கு தென்மேற்கே இந்துகுஷ் மலைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்கு பாகிஸ்தானில் 52 பேர் பலியானதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஊடகத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கனில் ரிக்டர் அளவில் 4.8 என்று பதிவான பின்னதிர்வு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானில் பலி எண்ணிக்கை 17 என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும் 55 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும் பூகம்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆப்கன் நகரமான தலுக்கானில் 12 பள்ளிச்சிறுமிகள் பலியாகியுள்ளனர். மேலும் 30 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆப்கன் தலைநகரில் பூகம்பத் தாக்கம் காரணமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கு வீடுகள் பல குலுங்கின, சுவர்களில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன, தெருக்களில் கார்கள் உருண்டு கிடந்தன என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கன் நேரப்படி இன்று மதியம் 2.39 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதன் தாக்கம் டில்லி, ஸ்ரீநகர், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டுள்ளது.
டில்லியில் சுமார் ஒரு நிமிடம் வரை இதன் தாக்கம் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கட்டிடங்கள் குலுங்கியதால் நூற்றுக்கணக்கானோர் கட்டிடங்களிருந்து வெளியேறி சாலைக்கு வந்தததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கன் தலைநகர் காபுலிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
196 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியான ஃபெய்ஸாபாத்துக்கு 82 கிமீ தொலைவில் தென் கிழக்கே இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. ஆனால், உயிரிழப்பு, காயம், சேதம் பற்றிய உடனடித் தகவல்கள் இல்லை.
நிலநடுக்கத் தாக்கம் காரணமாக ஸ்ரீநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதல்வர் ஓமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் காரணமாக வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் 4 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் நிலநடுக்கத்தைப் பார்த்த மக்கள், கட்டிடங்கள் ஆடியதைப் பார்த்ததாகவும், இது 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தை நினைவூட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.