மக்கள் குடியிருப்புக்களை
நோக்கி யானைக் கூட்டம்
நிந்தவூரில் சம்பவம்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமான நிந்தவூர் சந்தைக்கருகில் இன்று 6 ஆம் திகதி சுமார் 50 க்கும்
மேற்பட்ட யானைகள் தமது குட்டிகளுடன்
மக்கள்
குடியிருப்பு பகுதிகளை நோக்கி கூட்டமாக வந்து நின்று கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது.
வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நிந்தவூர்
பிரதேசத்திற்கு வருகை தந்து யானைக் கூட்டத்தை நோக்கி சப்த வெடிகளை
எறிந்து மக்கள் குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து அவைகளை விரட்டினர்.
கடந்த அரசாங்க காலத்தில் அம்பாந்தோட்டைப் பிரதேசங்களிலிருந்து
துரத்தியடிக்கப்பட்ட யானைகளே இவ்வாறு கூட்டம் கூட்டமாக அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களில்
மக்கள் குடியிருப்புக்களை நோக்கி வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யானைகளிலிருந்து மக்களின் உயிர்களையும் பொருள் சேதங்களையும் காப்பற்றுவதற்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே மக்கள் விருப்பமாகும்
0 comments:
Post a Comment