சிங்கப்பூர் உயர்தானிகர் சந்தர தாஸ் குழுவினருடன்  
அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸும் கலந்து கொண்டார்

இலங்கைக்கான சிங்கப்பூர் உயர்தானிகர் எஸ்.சந்தர தாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று மாலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து கலந்துரையாடினார்.
அவர்களது உரையாடல் முக்கியமாக நகரத் திட்டமிடல், ஈரலிப்பான நிலங்களின் அபிவிருத்தி, நீர் முகாமைத்துவம் என்பனவற்றை மையப்படுத்தியதாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இக்கலந்துரையாடலின்போது விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஆர்.. ஹபீஸ் ஆகியோர் பங்குபற்றினர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top