அரசாங்கத்தின்
வழிகாட்டலில் ஒரு வேலைத் திட்டம்
முஸ்லிம் அரசியல்வாதிகள் பெருமை தேடி
இரண்டு திறப்பு விழாக்கள்
ஓட்டமாவடி மீராவோடை அல்- ஹிதாயா மஹாவித்தியாலயத்தில் அரசாங்கத்தின் 1000 பாடசாலை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும்
விடயத்தில் அதிகாரத்திலுள்ள இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் பாடசாலையின்
நிர்வாகத்தினருக்கும் மாணவர்களுக்கும் பல அசெளகரியங்களை ஏற்படுத்தியிருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் வழிகாட்டலில் அமைக்கப்பட்ட ஒரு வேலைத் திட்டத்தை ஒரு முஸ்லிம் அரசியல்வாதி காலையில் திறந்து வைக்கை அதே வேலைத்திட்டத்தை மற்றொரு முஸ்லிம் அரசியல்வாதி மாலை நேரத்தில் திறந்து
வைத்து தத்தம் பெருமைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெருமை தேடும் இந்நடவடிக்கைக்காக மாணவர்கள் மாலை
நேரம் வரை பசியுடனும் அலுப்புடனும் காத்திருக்க
வேண்டிய பரிதாப நிலை காணப்பட்டதாம்!
இதோ இது சம்மந்தமான
செய்தி………
28.10.2015 காலை 11.00.மணிக்கு மட்/ மீராவோடை அல்-ஹிதாயா மஹா வித்தியாலயத்தில் 1000 பாடசாலை திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட விஞ்ஞான தொழில்நுட்ப ஆய்வுகூடம் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களால் 28/10/2014 இன்று மிகவும் கோலாகளமாக பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
28.10.2015 இன்று ஓட்டமாவடி மீராவோடை அல்- ஹிதாயா மஹாவித்தியாலயத்தில் தொழில்நுட்ப கட்டிடம் திறந்துவைக்கும் நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஷாம், மட்டக்களப்பு மத்திய வலய கல்விப்பணிப்பாளர் சேகு அலி ஆகியோருடன் கல்வி அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment