தூய பட்டு,ஜரிகையால் அப்துல் கலாம் உருவப்படம்

குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

தூய பட்டு, ஜரிகை இழைகளால் வடிவமைக்கப்பட்ட அப்துல் கலாமின் உருவப் படத்தை அவரது குடும்பத்தாரிடம் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஏழை மாணவர் நலச்சங்கம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்திய குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர் நலச் சங்கத்தின் சார்பில், கலாமின் சாதனைகளையும், கனவுகளையும் நினைவூட்டும் வகையில், கலாம் பிறந்த 1931-ஆம் ஆண்டை மையப்படுத்தி, 1931 பட்டு இழைகளாலும், அவரது மரணித்த ஆண்டை மையப்படுத்தி 2015 தூய ஜரிகை இழைகளாலும், 2 அடி உயரத்திலும், இரண்டே முக்கால் அடி நீளத்தில் 16 அங்கியும், அதேபோல 1 அடி உயரத்திலும், ஒன்றேகால் அடி நீளத்தில் 20 அங்கி சேர்த்து 36 அங்கியில் ரூ. 1 லட்சம் மதிப்பில் கலாமின் உருவப் படத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த உருவப்படத்தை ராமேஸ்வரத்தில் அவரது சகோதரர் முகம்மது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், அவரது மகன் ஜெய்னுலாப்தீன் ஆகியோரிடம் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவர் நலச்சங்கத்தின் நிர்வாகி பரமசிவம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top