224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை
சுட்டு வீழ்த்தியதாக
ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சினாயில்
ரஷ்ய விமானம்
விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள்
உட்பட 224 பேரும் உயிரிழந்ததாக
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து
நாட்டில் உள்ள
சினாய் கோஸ்டல்
ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு
மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான
KGL9268- என்ற 321 (Airbus 321) ஏர்பஸ் ரக
பயணிகள் விமானம்
217 பயணிகள், 7 விமானிகள் உட்பட 224 பேருடன் புறப்பட்டது.
இந்நிலையில்,
விமானம் புறப்பட்ட
23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து
கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை
இழந்தது.
இதையடுத்து,
விமானம் மாயமானது
குறித்து நடத்தப்பட்டு
வரும் முதற்கட்ட
விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த
விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக
தகவல் வெளியானது.
இதையடுத்து
எகிப்து இராணுவ
மீட்பு படை
விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதில்,
அந்த விமானம்
சினாய் மலைப்பகுதியில்
தெற்கு எல்-அரிஷ் ஹசானாவில்
விழுந்து நொறுங்கி
கிடந்தது அடையாளம்
காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து,
உடனடியாக தகவல்
தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 45-க்கும் மேற்பட்ட
அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில்,
விமானத்தில் பயணம் செய்த 17 பேர் குழந்தைகள்
உட்பட 224 பேரும்
உயிரிழந்ததை எகிப்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில்
138 பெண்கள், 62 ஆண்கள்,17 சிறுவர்கள் அடங்குவர். பெரும்பாலானோர்
ரஷ்யர்கள் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
ரஷ்ய விமானத்தை
நாங்கள் சுட்டு
வீழ்த்தினோம் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.