மாணவர்களின் பாதுகாப்பு குறித்து
அக்கறை செலுத்துமாறு கோரிக்கை
கல்முனைக் கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் அமைந்திருக்கும் ஜீ.எம்.எம்.எஸ்.
வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலையில் நாளாந்த கல்வி நடவடிக்கைகள்
முடிவுற்று வீடு செல்லும் போது வீதியில் விபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய அபாய
நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் புகார்
தெரிவிக்கின்றனர்.
இப்பாடசாலைக்கு அருகாமையில் நான்கு சந்திகள் உள்ள வீதிகள் இருப்பதால் பாடசாலை
விட்டதும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு தாம் முன்னே செல்ல வேண்டும்
என்று பாதைக்கு ஓடி வருவதும், பாதையில் மாணவர்கள் கூட்டமாக நின்று
கொண்டிருப்பதும், மற்ற மாணவர்கள் அவர்களைக் கடந்து வீதிக்குள் ஓடி வருவதும்,
வீதியில் ஓடி வந்து குறுக்குப் பாதைகளைக் கடக்கும் போது நிதானமாகக் கடக்காமல் அதே
வேகத்தில் கடந்து செல்வதையும் காணக்கூடியதாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இப்பாடசாலை மாணவர்கள் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவத்திற்குள் தவறி
விழக்கூடிய ஆபத்துக்கள் உள்ளன. இப்படியான மாணவர்களின் அவாதானமில்லாத நிலையால் வீதியில் மாணவர்கள் விபத்துக்களை எதிர்நோக்க
வேண்டிய அபாய நிலையில் உள்ளதாக பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
மாணவர்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டதன் பின்னர் அதற்காக ஐயோ
என கைசேதப்பட்டு வந்த பின் பாதுகாப்புத் தேடாமல் வருமுன் பாதுகாப்புத் தேடுவதே புத்திசாலித்தனமான
காரியமாகும்.
பாடசாலையில் நாளாந்த கல்வி நடவடிக்கைகள் முடிவுற்று மாணவர்கள் வீடு செல்லும் போது ஆசிரியர்கள் இருவர் வீதிக்கு வந்து மாணவர்களைக் கண்கானித்து
அனுப்பி வைப்பதன் மூலம் விபத்துக்களில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற உதவ முடியும்
என ஆலோசணை தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்
ஆகியோர் இது விடயத்தில் அக்கறை செலுத்துதல் வேண்டும் என பெற்றோர்களும் நலன் விரும்பிகளும்
எதிர்பார்க்கின்றனர்.
0 comments:
Post a Comment