நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார்
மூளைக்காய்ச்சலால்
உயிரிழப்பு
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் மகன்
பிரசன்னகுமார் (வயது13) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து
வருபவர் பிரபல நடிகர் விவேக். அவருடைய மனைவி அருள்செல்வி. இவர்களது மகன்
பிரசன்னகுமார் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 40 நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிரசன்னகுமார், சென்னை வடபழனியில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்தார். தீவிர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள விவேக் வீட்டில்
பிரசன்னகுமாரின் இறுதிச் சடங்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கின்றன.
விருகம்பாக்கம் இளங்கோ நகர் மின்மயானத்தில் இன்று மாலை 4 மணிக்கு உடல் தகனம் நடக்கிறது.
விவேக் வெளியிட்ட வேண்டுகோளில், ‘‘தீவிர காய்ச்சலின் பாதிப்புக்கு மகனைப்
பறிகொடுத்துவிட்டு, நானும்
குடும்பத்தினரும் வேதனையில் இருக்கிறோம். எனவே, செய்தியாளர்கள், தொலைக்காட்சி, இணையதள நண்பர்கள் செய்தி சேகரிக்கவோ, படம் பிடிக்கவோ என் வீட்டுக்கு வருவதை
அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.