உலகிலேயே மிக வயதான ஜப்பான் பெண்மணி
117 வயதில் காலமானார்



உலகின் வயதான பெண் என்று கருதபட்டவர் ஜப்பானை சேர்ந்த  மிசாவோ ஒகாவா. இவர் தனது தனது 117 வயதில் காலமானார். உள்ளூர் நேரப்படி  இன்றுகாலை 7 மணிக்கு இறந்தாக அவர் தங்கி இருந்த மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  19ஆம் நூற்றாண்டில் பிறந்து உயிரோடு வாழ்ந்து வந்தவர்களில் ஒருவராக இவர்  இருந்தார்.
மிசாவோ ஒகாவா மார்ச் 5, 1898 ஆண்டு பிறந்தார். இவர் தனது 1919 ஆண்டு யூகியோ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.ஒகாவா பிறந்து ஐந்து ஆண்டுகளில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை கண்டுபிடித்தனர். அவர் பருவ வயதில் இருக்கும் போதுதான் முதலாம் உலகப்போர் ஆரம்பம் ஆனது. மேலும் அவரது 70 வயதில் தான் மனிதன் முதலில் நிலவில் இறங்கினான்.இவரது கணவர் 1931 ஆம் ஆண்டே இறந்து விட்டார். இவருக்கு 4 பேரக்குழந்தைகளும்  6 கொள்ளு பேரங்குழந்தைகளும் உள்ளனர்.
2013 ஆம் ஆண்டு 114 வயதில் இவர் உலகின் மிக அதிக வயதான பெண் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ஜப்பான் மக்கள் உலகில் நீண்ட ஆயுள் உடையவர்கள் என்று அறியப்பட்டுள்ளனர். இப்பொது மிசாவோ ஒகாவா இறந்துள்ளதால் அமெரிக்காவை சேர்ந்த 116 ஜெர்டுர் வியவர் என்பவர் உலகின் மிக அதிக வயதான பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்
 ஒகாவாவின் மகள் கிமினோ மேக்கர் கூறும் போது  மார்ச் மாதம் பிறந்தநாள் கொண்டாடினோம்  சிறிது நாளிலேயே இறந்து விட்டார் என கூறியுள்ளார்.

இவர். கடந்த 10 நாட்களாக பசி எடுக்காமல் இருந்ததாகவும் இன்று காலை அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மூதாட்டியின் பேத்தி தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top