ஊடகங்களுக்கு நடத்தை நெறிகள் அவசியம்
தி இந்துகுழும தலைவர் என். ராம் கருத்து

ஊடக நிறுவனங்கள் அனைத் தும் நடத்தை நெறிகளை அறிமுகப் படுத்துவது மிகவும் அவசியம் என்றுதி இந்துகுழும தலைவர் என்.ராம் வலியுறுத்தியுள்ளார்.
லேக் ஹவுஸ் குரூப்பின் நிறுவன முன்னாள் தலைவர் எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு விழா நேற்றுமுன்தினம் மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில்தி இந்துகுழும தலைவர் என். ராம் பங்கேற்று பேசிய தாவது:
பொருளாதார ரீதியாக நிலைத்திருப்பதும், அரசியல் தலையீடுகளால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதும்தான் இப்போது ஊடக நிறுவனங்கள் எதிர் கொள்ளும் சவால்கள். ஊடக நிறுவன உரிமையாளர்களின் நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களை திரித்துக் கூறும்போக்கு, ஊடகத்துறை வர்த்தக மயமாகி வருவது, பத்திரிகைகளுக்குள் காணப்படும் தீவிர விலைக்குறைப்பு போட்டி போன்ற எதிர்மறை போக்கு பெருகி வருகிறது. இது தவிர தமது பிரதான வர்த்தக நோக்கத்தை வேறு ஒன்றாக கொண்டு இயங்கும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்தி ஊடகத் துறையை தமது கிளையாக வைத்துக்கொண்டு செயல்படும்போது மேற்குறிப்பிட்ட எதிர்மறை போக்குகள் இன்னும் வலுவடையும்.
ஊடக நிறுவனங்கள் நடத்தை நெறிமுறைகளை நிர்ணயித்துக் கொண்டு அந்த வரம்புக்குள் பத்திரிகையாளர்களும் ஊடகத் தொழில் நிறுவனங்களும் இயங்க வேண்டும். மேலும் ஊடக நிறுவனங்களுக்குள் கட்டுப் பாடுடன் செயல்படுவதற்கான நடைமுறை ஏற்பாடும் அவசியம் இவ்வாறு அவர் பேசினார்.

 
எஸ்மண்ட் விக்ரமசிங்க நினைவு விழாவில் விருது பெற்ற நியூ உதயன் பப்ளிகேஷன்ஸ் குழும தலைவர் இ.சரவணபவன். உடன் ‘தி இந்து’ குழும தலைவர் என்.ராம்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top