கொவிட் 19 சுகாதார, சமூக
பாதுகாப்பு
நிதியத்தின் வைப்பு
ரூபா 900 மில்லியனாக அதிகரிப்பு
இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன்
ரூபாவை கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அண்மையில்
கையளித்தது. அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
சப்ரகமுவை மாகாண சபை நிதியம் ஒரு மில்லியன் ரூபாவையும்,
இரத்தினபுரியை சேர்ந்த
ஜானக ரணவக ஒரு லட்சம் ரூபாவையும், இரத்தினபுரி மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒரு லட்சத்து
ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலைகள் மாகாண ஆளுநர் டிகிரி
கொப்பேகடுவை அவர்களினால் ஜனாதிபதியிளிடம் கையளிக்கப்பட்டன.
இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் சங்கம் 05
லட்சம் ரூபாவையும் இலங்கை டெலிகொம் பௌத்த சங்கம் 03 லட்சம் ரூபாவையும்
நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.
லங்கா சீனி தனியார் கம்பனி நேரடியாக வைப்பு செய்த
3.5மில்லியன் ரூபாவுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 900
மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற
இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும்
அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் மூலம்
நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட
திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும்.
0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக
பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலேவை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை
தெரிந்துகொள்ள முடியும்.
0 comments:
Post a Comment