பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி
கண்டம் விட்டு கண்டம் தாக்கும்
கொடூர வெட்டுக்கிளிகள்
கிழக்கு
ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி
கண்டம் விட்டு
கண்டம் தாக்கும்
கொடூர வெட்டுக்கிளிகள்
தற்போது இந்தியாவில் ஊட்டி காந்தள்
பகுதியில் காணப்பட்டதால் அங்குள்ள விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஆப்பிரிக்க,
அரேபிய நாடுகளைத்
தாக்கிய வெட்டுக்கிளிகளின்
படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும்
கடும் சேதத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்ரிக்க
நாடுகளான, கென்யா,
எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வந்த இந்த வெட்டுக்கிளியின்
பெயர்' ஹீலிபேரா
'என அழைக்கப்படுகின்றன.
அங்கிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான்
சென்று அங்கிருந்து
இந்தியாவுக்குள் நுழைந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., என
படையெடுத்து விவசாயிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில்
இந்த வெட்டுக்கிளிகள்
கேரளாவின் வயநாட்டிலும்
தமிழ்நாட்டின் ஊட்டி காந்தள் பகுதியில் காணப்படுகிறது.
இந்த வெட்டுக்கிளிகள்
ஒரு சதுர
கி.மீட்டருக்கு
8 கோடி வரை
படையெடுக்கும் தன்மை கொண்டதால் இந்திய விவசாயிகள்
மத்தியில் கலக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment