ஆம்பன் புயலுக்கு
மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி
ஆம்பன் புயலுக்கு மேற்குவங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆம்பன் புயல் நேற்று இரவு மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 150-165
கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.
மழை காரணமாக கோல்கட்டா விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்ததால். விமான நிலையம் மூடப்பட்டது. கோல்கட்டாவில் வீசிய பலத்த காற்று காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. இதனால், பல நகரங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல தெருக்களில் வெள்ள நீர் தேங்கியும் மரங்கள் சாய்ந்தும் கிடக்கின்றன. கோல்கட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த புயல் சேதம் தொடர்பாக மாநில முதல்வர் மம்தா கூறியதாவது: புயல் காரணமாக 72 பேர் பலியாகினர். ஒரு லட்சம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போதிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment