உலகம் முழுவதும் கொரோனா
 வைரஸ் தாக்குதலுக்கு
 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலி
  


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது.

உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 51 ஆயிரத்து 5 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 27 லட்சத்து 40 ஆயிரத்து 462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 753 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 20 லட்சத்து 35 ஆயிரத்து 432 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 30 ஆயிரத்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 94,941
ரஷியா - 3,099
பிரேசில் - 18,894
ஸ்பெயின் - 27,888
இங்கிலாந்து - 35,704
இத்தாலி - 32,330
பிரான்ஸ் - 28,132
ஜெர்மனி - 8,270
துருக்கி - 4,222
ஈரான் - 7,183
இந்தியா - 3,435
பெரு - 3,024
சீனா - 4,634
கனடா - 6,031
மெக்சிகோ - 6,090
பெல்ஜியம் - 9,186
நெதர்லாந்து - 5,748
ஸ்வீடன் - 3,831
இலங்கை - 09

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top