அரபு எமிரேட்சின் பாடசாலைகளில்
குழந்தைகளுக்கு கொரோனா
விழிப்புணர்வு பாடம்
அரசு அறிவுறுத்து
அரபு
எமிரேட்சில் கொரோனா பாதிப்புகள் குறித்து 3 நிமிடங்கள்
வரை குழந்தைகளுக்கு
விழிப்புணர்வை பாடசாலைகளில் ஏற்படுத்த
வேண்டும் என
அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா
வைரஸின் தாக்கம் உலகின்
பல நாடுகளையும்
அச்சுறுத்தி வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சிலும்
நாளுக்கு நாள்
கொரோனா தீவிரமாக
பாதித்து வருகிறது.
நோய் பரவுவதை
குறைக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வும்,
அதையொட்டி சிறப்பான
சிகிச்சைகளையும் அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில்
அரபு எமிரேட்சில்
உள்ள பாடசாலைகளில், குழந்தைகளுக்கு
ஒவ்வொரு பாடவேளைகளிலும்
குறைந்தது 3 நிமிடங்களில், நோயின் தீவிரம் குறித்து
இரண்டு வாரங்கள்
வரை விழிப்புணர்வை
ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா குறித்த
பாடங்களை குழந்தைகள்
கற்க வேண்டும்
என கல்வி
அமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment