வூதியில் சுற்றுலா விசாக்களுக்கான
காலக்கெடு நீடிப்பு

கொரோனா தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் காலாவதியான சுற்றுலா விசாக்களுக்கான காலக்கெடுவை 3 மாதங்களுக்கு சவூதி அரசு நீடித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. நோய் பரவுதலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு பல்வேறு பொது சேவைகளும் முடக்கப்பட்டது. சவூதி உட்பட பல நாடுகளில் உலகத்தின் பல பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பணிபுரிகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் பாதிப்பு காரணமாக பலநாடுகளும் தங்களது மாநில மற்றும் பிற எல்லைகளையும் மூடியது. வேலை மட்டுமின்றி, மற்ற பிற காரணங்களுக்காகவும் சுற்றுலா விசாவை பயன்படுத்துவர். சவூதியிலும் மார்ச் முதல் விமான நிலையம் மூடப்பட்டது.

இதனால் சுற்றுலா விசாவில் சவூதிக்கு சென்றவர்கள் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காலவதியான விசாக்களுக்கு மூன்று மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து சுற்றுலா விசா மூலம் அங்கு சென்றவர்கள் கூடுதலாக மூன்று மாதம் சவூதியில் தங்கி கொள்ளலாம். சவூதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கான காலக்கெடு கடந்த மாதம் நீட்டிக்கப்பட்டது. பெப்.,24 முதல் மே.,24 வரையான காலங்களில், சவூதியில் 3 மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது.
சவூதி நாட்டில் கொரோனாவால் 76,726 பேர் பாதிக்கப்பட்டனர். 411 பேர் பலியாகினர். நோய் தொற்றில் இருந்து 48,450 பேர் குணமடைந்தனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top