உலகம் முழுவதும் கொரோனாவுக்கு
2 லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பு
  
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 41 லட்சத்து 728 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவியவர்களில் 23 லட்சத்து 78 ஆயிரத்து 822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவபர்களில் 47 ஆயிரத்து 681 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் 2 லட்சத்து 80 ஆயிரத்து 431 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 80,037
ஸ்பெயின் - 26,478
இத்தாலி - 31,587
ரஷியா - 1,827
பிரான்ஸ் - 26,310
ஜெர்மனி - 7,549
பிரேசில் - 10,656
துருக்கி - 3,739
ஈரான் - 6,589
சீனா - 4,633
கனடா - 4,693
பெரு - 1,814
இந்தியா - 1,981
பெல்ஜியம் - 8,581
நெதர்லாந்து - 5,422
மெக்சிகோ - 3,533
சுவிஸ்சர்லாந்து - 1,830
ஈக்வடார் - 1,717
போர்ச்சீகல் - 1,126
ஸ்வீடன் - 3,220
அயர்லாந்து - 1,446
இலங்கை - 09



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top