வெள்ளத்தில் மிதக்கும்
 கோல்கட்டா விமான நிலையம்





மேற்கு வங்கத்தில் கரையை கடந்த அம்பான் புயல், கோல்கட்டா விமான நிலையத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது.

வங்கக்கடலில் உருவான அம்பான் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையை கடந்தது. இதனால், அங்கு சுமார் 6 மணி நேரம் பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது.

இந்த புயல், கோல்கட்டா விமான நிலையத்தின் கட்டமைப்புகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக விமான நிலைய கட்டடங்கள், ஓடுபாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. புயல் கரையை கடப்பதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையம் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top