களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்
கடும் கோடை காலத்தில்
திடீரென உயர்ந்து வழிந்துகொண்டிருக்கும்
 கிணற்று நீர்
 - பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சிக்கு மத்தியிலும், களுவாஞ்சிகுடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் கிணற்று நீர் பொங்கி வழிந்தோடும் அதிசயத்தைப் பார்வையிட பெருமளவில் பொதுமக்கள், இன்று (13) படையெடுத்துள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது..

மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கே உள்ள களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் கோவில் வளாகத்திலுள்ள கிணற்றில், இன்று காலை 06 மணியளவில் நீர் நிறைந்து வழிந்துள்ளமையை சிலர் அவதானித்துள்ளனர்.

இந்தச் செய்தி, அப்பகுதியில் பரவியதைத் தொடர்ந்து அதனைப் பார்வையிடக் குவிந்த பொதுமக்களை விலக்க பொலிஸார் கடும் பிரயத்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும், விசேட அதிரடிப் படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

கிணற்றின் அருகில் சென்று பார்வையிட்டுள்ள பொதுமக்கள் நிரம்பி வழிந்த கிணற்று நீரைப் பாத்திரம் கொண்டு அள்ளி எடுத்துச் சென்றுள்ளார்கள். எனினும், நீர் கிணற்றின் உயர்மட்டம் வரை நிரம்பிக் காணப்படுகின்றது.

இதேவேளை, அப்பகுதியில் தொடர்ந்தும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதை பொலிஸார் தடுத்து வருவதுடன், கிணற்று நீரை பகுப்பாய்வு செய்வதற்கு சுகாதாரத் துறையினர், நீரை எடுத்துச் சென்றுள்ளனர்.










0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top