அமைச்சரவை தீர்மானங்கள்



நேற்றைய தினம் (2020.05.06) கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இங்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களின் சாரம்சம் பின்வருமாறு:

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 5000 ரூபா கொடுப்பனவு சுமார் 74 இலட்சம் பேருக்கு தற்பொழுது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிரமமான காலப்பகுதிக்குள் இந்த நிவாரணத்தை வழங்கும் நடவடிக்கைகளில் நேரடியாக பங்களிப்பு செய்த கிராம குழுக்களின் அங்கத்தவர்களான அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள், தொலைபேசி மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளுக்காக விசேட கொடுப்பனவை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆதர்சி கிளார்க் மத்திய நிலையத்தின் கீழ் இதுவரையில் இலங்கை விஞ்ஞானிகளினால் விண் வெளிக்கு அனுப்பப்பட்ட நிலவு மீதான புகைப்படங்களை மேற்கொள்ளும் உபகரணங்கள் மூலம் நாளாந்தம் புகைப்படங்கள் மற்றும் தரவுகள் கிடைத்து வருகின்றன. இந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் தரவுகளை பெற்றுக்கொள்தல் மற்றும் விநியோகிக்கும் மத்திய நிலையமொன்றை ஹோமாகம , தலகல பிரதேச ஸ்தாபித்தல்.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் 12 மாடிகளைக் கொண்ட வைத்திய பீட கட்டிடத் தொகுதிக்கான ஒப்பந்தக் காலம் நிறைவடைந்தமையால் அதன் நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மத்திய பொறியியலாளர் அலுவலகத்தின் மூலம் அதன் நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரபிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவன மாணவர்ளைப் போன்று தொழிற்துறையினரும் கொழும்பு நகரப்பகுதிகளில் விடுதிகளில் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்கின்றனர். விடுதி உரிமையாளர்களிடமும் வர்த்தக நிலையங்கள் முதலானவற்றை வாடகைக்கு வளங்கிளவர்களிடமும் இந்த கொவிட் 19 காலப்பகுதியில் மாதாந்த வாடகையில் அரைப்பங்கை மாத்திரம் அறவிடுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

அரசாங்கம் கொண்டுள்ள தொழிற்துறைகள் இந்த நெருக்கடியான காலப்பகுதியில் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் ஊழியர்களின் சம்பளத்தை செலுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. இதற்கமைவாக உதாரணமாக சதோச நிறுவனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, அரச பொறியிலாளர் கூட்டுத்தாபனம் போன்ற நிறவனங்களுக்கு நிதி வசதிகளை வழங்குதல்.

அரசாங்கத்தினால் இதுவரையில் வெளிநாடுகளில் இருந்த மாணவர்களில் பெரும்பாலானோரை நாட்டிற்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளது. முக்கியத்துவ ஆவணப்பட்டியலுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதுடன் வெளிநாட்டு பணியாளர்களை அழைத்து வருவதற்கு நடைமுறையொன்று முன்னெடுக்கப்படும்.

அடுத்த நடவடிக்கையாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பணியாளர்களை அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதடன் முக்கியமாக குவைட், மாலைதீவு மற்றும் டுபாய் நாடுகளில் இருக்கும் இலங்கையர்களில் இலங்கைக்கு வருவதற்கு தேவைப்படுவதாக அறிவித்துள்ளவர்களை அழைத்து வர எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கமைவாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கும் இலங்கையர்கள் இடவசதிக்கமைவாக அழைத்து வந்து தனிமைப்படுத்தலுக்குட்படுத்தவுதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தென் ஆபிரிக்காவின் முன்னால் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உருவச் சிலையொன்றை நிர்மாணிப்பதற்கு கொழும்பு மாநர சபை நூல்நிலைய வளவிற்குட்பட்ட காணியில் இடவசதியைப் பெற்றுக் கொடுத்தல். இதற்காக அரசாங்கம் மானியத்தை ஒதுக்கீடு செய்யாது.
இதே போன்று எதிர்வரும் தேசிய வீரர்கள் மற்றும் பாராட்டப்பட வேண்டியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உருவச்சிலைகள் நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பு செய்வதற்கு பதிலாக ஒரு விசேட இடத்தில் இவற்றை நிர்மாணித்து அஞ்சலி செலுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை வகுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கராப்பிட்டிய புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்காக 10 மாடிகளைக் கொண்ட கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பணிகள் ஆரம்பமாகவில்லை இதற்காக அரசாங்கத்தினால் 2020 – 2021 வரவு செலவு திட்டத்தின் மூலம் 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டதுடன். இந்த மானியம் கிடைக்கும் வரையில் இதற்காக விசேட பங்களிப்பை வழங்கும் ஊழடழரசள ழக ஊழஎநசயபந என்ற நிறுவனத்தினால் சேகரிக்கப்பட்ட 750 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணப்பணிகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீன அபிவிருத்தி வங்கிக்கிடையில் கடனை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் மூலம் 15 பில்லியன் ரூபா செலவில் 105 கிலோமீற்றர் வீதியை அபிவிருத்தி செய்தல்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top