சாய்ந்தமருதின் அபிவிருத்திகள்
நாசமாய் போனதன் மர்மம் என்ன?

1994 முதல் 2000 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சரும் , முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான மர்ஹும் அஸ்ரப் அவர்களால் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நான் அறிந்த வரையில்பின்வரும் மூன்று
அபிவிருத்தி திட்டங்கள் மாத்திரம் இடம் பெற்றன.

1. சாய்ந்தமருது தபாலக கட்டிடம்
2. சாய்ந்தமருது பொதுச் சந்தை கட்டிடம்
3. சாய்ந்தமருது நீர் விநியோகம்.

இவ் வேலைத்திட்டங்கள் மூன்றும் இன்று
அழிந்த நிலையில் காணப்படுகிறது.

சாய்ந்தமருது தபாலகக் கட்டிடம் இன்று
உடைந்து சேதமாகி பாம்பு குடியிருக்கும்
இடமாக மாறியுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப்
அவர்களின் உறவினரே இக்கட்டிடத்தை ஒப்பந்தக்காரராக
நிர்மாணித்தார்.

சாய்ந்தமருது பொதுச் சந்தைக் கட்டிடம்
சந்தைக்குரிய இலட்சணம் எதுவும் இல்லாமல்
கட்டப்பட்டதால் கழுதை தேய்ந்து கட்டெறு
ம்பானதாக மாறி சந்தையில்லை.

சாய்ந்தமருதுக்கூ குடி நீர் விநியோகம் இன்று
அயல் கிராமமான காரைதீவில் இருந்து
நீர் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

சாய்ந்தமருதுக்கு கட்டப்பட்ட நீர்த்தாங்கி
யில் நீர் ஏற்றினால் உடைந்து விழும்
என்ற பயத்தினால் ஒரு வருடத்திற்கு
மேலாக நீர் ஏற்றந்படுவதில்லை. இதனை
யார் நிர்மாணம் செய்து கொள்ளையடித்
தார்களோ அல்லாஹ் அறிவான்.

நீர் வழங்கல் காரியாலயத்தில் இதுபற்றி
கேள்வி எழுப்பினால் பதில் சமாளித்து
எவரையோ காப்பாற்றும் விதத்தில் தரப்
படுகிறது. சாய்ந்தமருது அரசியல் கட்சி
களின் விளைநிலமாக போனதன் வினைதான் காரணமா?

கரைவாகுப் பற்றுவில் பாரிய நீர்தாங்கி
அமைத்து கல்முனை, சாய்ந்தமருதுவுக்கு
நீர்வழங்கல் செய்யப்போகிறோம் என
கதை சொன்னார்கள்.அதுவுமில்லை.

.எல்.எம்.முக்தார்





1 comments:

  1. சேர், தயவு செய்து மன்னிக்க வேண்டும். அஷ்ரப் அமைச்சர் அவரகள் உங்களது ஊருக்கு இந்தளவு வேலையாவது செய்து தந்துள்ளார்கள். அதனையிட்டு நீங்களும் ஊர் மக்களும் அவரகளுக்கு மிகவும் நன்றி செலுத்த வேண்டும். அரசாங்கததிடம் இருந்து பணம் பெற்று இப்படியான வேலைத்திட்டங்களைப் பெறுவதற்கு சிறுபான்மை இன அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் படும் பாடு சொல்லும் தரமன்று. இதற்கு தகுதியுடைய கொந்தராத்துக்காரர்களை அரச அதிகாரிகள் மட்டத்தில் இருந்துதான் பெற்று அத்திட்டம் நடைமுறைப்படுத்தபபடும். அமைச்சர் ஒருவரது உறவினர் என்பதற்காக ஒருவருக்கு கொந்தராத்துக்களை அரசமட்டம் கொடுக்கமாட்டாது. அதற்கு எல்லாம் விதிமுறைகள் உள்ளன. அரச அதிகாரிகள் அதற்கு எல்லாம் ஒத்துப் போகமாட்டார்கள். அஷ்ரப் அமைச்சர் அவரகள் தம்முடைய அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு அந்தந்த ஊர் மட்டங்களிலுள்ள பெரியவரகளை சம்பந்தப்படுத்தி அமைச்சுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மூலமாகவே அவற்றை நடைமுறைப்படுத்தும் வழக்கம் அவரகளுக்கு இருந்தது. இந்தத் திட்டம் அம்பாரை மாவட்டத்தில் மாத்திரமல்ல திருகோணமலை மற்றும் மடடக்களப்பு மாவட்டத்திலும் அமுல்படுத்தப்பட்டிருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் எவ்வித குளப்பமும் இருக்கவில்லை. அதுபற்றிய எந்தவிதமான முறைப்பாடுகளும் இன்றைய திகதிவரை எவருக்கும் அனுப்பப்படவில்லை. மட்டக்களப்பிலும் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். அஷ்ரப் அமைச்சரது காலத்தில் பிழைகள் ஏற்பட்டு இருக்குமிடத்து அவரகளுக்குப் பின்னர் பதவிகளில் அமர்ந்திருந்த கௌரவ பேரியல், அதாவுல்லா மற்றும் மொகிதீன் ஆகியோர்களிடமும் அதன்பின்னர இவரகளுடன் அதிகாரத்திற்கு வந்த ரவுப் ஹக்கீம், ஹரீஸ், ஹசன் அலி, மன்சூர் ஆகியோர்கள் மூலமாக இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டப்பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து 20 வருடங்கள் கழித்து ஒரு பெரிய மனிதர்மீது அபாண்டமாக பழிசுமத்துவது தர்மம் அல்ல. இந்தக் குற்றச்சாட்டினைப் படிக்கும் அவரகளது குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு மனவேதனைக்கு உட்படுவார்கள் என்ற ஈவிரக்கம் தங்கள் மனதில் எழவில்லையா? அவரகளின் "வபாத்" தின் பின்னர் நடைபெற்ற இவ் விடயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியவரகள் யார்? அவரகளுக்குப் பின் வந்தவரகள்தான். அஷ்ரப் அவரகள் தம்முடைய சொந்தத் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தால் இப்படியான ஒரு மரணம் அவரகளுக்கு ஏற்பட்டிருக்குமா. மக்களுக்காக போரில் இறங்கியவர் சூழ்ச்சிக்காரர்களால் கொடிய அராஜகத்திற்கு பழியானது யாருக்காக. Facebook, Computer, Pen இருப்பதற்காக தேவையற்ற தரவுகளை வேண்டாத நேரங்களில் இடுவதனை தயவுசெய்து நிறுத்திக் கொள்ளவும்.

    ReplyDelete

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top