2 லட்சத்து 65 ஆயிரத்தை
தாண்டிய
பலி எண்ணிக்கை
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை
2 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்தது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில்
இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ்
தற்போது உலகின் 212 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவை குணப்படுத்தும் வகையிலான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும்
பணியில் விஞ்ஞானிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். ஆனாலும் இந்த வைரசின் தாக்கமும்
அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர்
எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 38 லட்சத்து 36 ஆயிரத்து 620 பேருக்கு
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 22 லட்சத்து 63 ஆயிரத்து 161 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 48 ஆயிரத்து 77 பேரின் நிலைமை
மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர்
சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும்
இதுவரை 2 லட்சத்து 65 ஆயிரத்து 366 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா - 74,809
ஸ்பெயின் - 25,857
இத்தாலி - 29,684
இங்கிலாந்து - 30,076
ரஷியா - 1,625
பிரான்ஸ் - 25,809
ஜெர்மனி - 7,275
துருக்கி - 3,584
பிரேசில் - 8,588
ஈரான் - 6,418
சீனா - 4,633
கனடா - 4,232
பெரு - 1,533
இந்தியா - 1,783
பெல்ஜியம் - 8,415
நெதர்லாந்து - 5,204
சுவிஸ்சர்லாந்து - 1,805
ஈக்வடார் - 1,618
மெக்சிகோ - 2,704
போர்ச்சீகல் - 1,089
ஸ்வீடன் - 2,941
அயர்லாந்து - 1,375
இலங்கை - 09
0 comments:
Post a Comment