நடிகர் ரஜினிகாந்தின்
இளைய மகள்
செளந்தர்யா
திருமணம்
எதிர் வரும்
பெப்ரவரி 11-ம் திகதி
நடிகர்
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா - பிரபல
மருந்து கம்பெனியின்
உரிமையாளர் விசாகன் இருவருக்குமான திருமணம் எதிர் வரும் பெப்ரவரி 11-ம்
திகதி ரஜினியின்
போயஸ் கார்டன்
இல்லத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
நடிகர்
ரஜினிகாந்தின் இளையமகள், சௌந்தர்யா. மோஷன் கேப்சரிங்
தொழில்நுட்பத்தில் வெளிவந்த முதல்
இந்தியத் திரைப்படமான
`கோச்சடையான்’ படத்தை இயக்கியவர். சமீபத்தில் தனுஷ்
நடித்த, `வேலையில்லா
பட்டதாரி 2’ படத்தை இயக்கினார். ஏற்கெனவே திருமணமான
இவர், கருத்து
வேறுபாடு காரணமாக
கணவரிடமிருந்து பிரிந்து விவாகரத்து பெற்றார்.
இந்த
நிலையில் சௌந்தர்யா
பிரபல மருந்து
கம்பெனியின் உரிமையாளரான விசாகன் என்பவரைக் காதலித்து
வருவதாகச் செய்திகள்
வந்தன. விசாகனும்
முதல் திருமண
பந்தத்திலிருந்து விவாகரத்து பெற்றவர்தானாம்.
சௌந்தர்யா - விசாகன் திருமணச் செய்தி தற்போது
உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த
மூன்று மாதங்களுக்கு
முன்புதான் விசாகனும், செளந்தர்யாவும் முதல் முறையாகச்
சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். நட்பாகப்
பழகத் தொடங்கியவர்கள்,
`ஒரே அலைவரிசை
எண்ணம் கொண்ட
நாம் ஏன்
திருமணம் செய்துகொள்ளக்கூடாது?’
என்று பேசி,
தங்களின் விருப்பத்தை
இரு வீட்டார்களிடமும்
தெரியப்படுத்தினர். பிறகு, இரு
குடும்பத்தாரும் சந்தித்துப் பேசி இவர்களின் திருமணத்தை
உறுதி செய்தனராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.