கல்முனை நகரில் சகல வசதிகளுடனான
முஸ்லிம் உயர்தர பாடசாலை ஒன்று
உருவாக்கப்படல் வேண்டும்
“அம்பாறை மாவட்டக் குரல்” எனும் அமைப்பு தீர்மானம்
கல்முனை நகரில் சகல
வசதிகளுடனான முஸ்லிம் உயர்தர
பாடசாலை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் என “அம்பாறை மாவட்டக் குரல்” எனும் அமைப்பு தீர்மானம் ஒன்றை
எடுத்துள்ளதுடன் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொள்வது எனவும் முடிவு
செய்துள்ளது.
இஸ்லாமாபாத்திலுள்ள
முஸ்லிம் பாடசாலையை இதற்கென தெரிவு செய்து இப்பாடசாலையில் சகல வசதிகளையும் ஏற்படுத்துவதன் மூலம் முஸ்லிம் உயர்தர
பாடசாலையாக உருவாக்க முடியும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அம்பாறை மாவட்டக் குரல்” அமைப்பினால் பின்வரும் மக்கள்
தேவைகளை அரசாங்கத்தினதும் அரச
அதிகாரிகளினதும் கவன்த்திற்கு கொண்டுவந்து
தீர்வு காணப்படல் வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களின் பிரதான போக்கு வரத்துப் பாதையான கிட்டங்கிப் பாலமும்
அதனையொட்டிய பாதையும் மழைபெய்யும் காலங்களில் நீரில் மூழ்கி மனித உயிர்களுக்கு ஆபத்தாக
அமைந்து வருகின்றது. இதனை புனரமைப்பதற்கான முன்னெடுப்புக்களை எடுப்பது.
கல்முனை மாநகர மண்டபம் மக்கள் பாவனைக்கு உதவாத நிலையில்
தொடர்ந்து மூடிக்கிடக்கின்றது. இம்மண்டபம் மாணவர்களின் கல்விக் கருத்தரங்கு மற்றும்
பொது மக்களின் ஏனைய பொது வைபவங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் உடனடியாகத் திறப்பதற்கு
உரியவர்களைச் சந்தித்துப் பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கல்முனை மக்கள் வங்கிக்கான புதிய கட்டடம் நிர்மாணிப்பதற்கான
வேலைத்திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கப்படாத நிலையில் தொடர்ந்து பல மாதங்களாக வாடகைக்
கட்டடத்தில் இக்கிளை இயங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் வங்கியின்
உயர்பீடத்திடம் விடயத்தை கொண்டு செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
சுனாமியால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நொரச்சோலையில் கட்டப்பட்ட வீடுகளை இன்னும்
தாமதப்படுத்தாமல் அவைகளை புனரமைத்து பயனாளிகளுக்கு பகிர்த்தளிப்பதற்கு நடவடிக்கை
எடுப்பதற்கு ஆளுநரின் உதவியை நாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment