நுவரெலியா - தலவாக்கலை
பிரதான வீதியில் லொறி விபத்து
திஸ்ஸமஹாராம
பகுதியிலிருந்து அக்கரபத்தனைக்கு கால்நடைக்கான
தீணிகளை ஏற்றி
சென்ற லொறி
இன்று காலை
விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா
- தலவாக்கலை பிரதான வீதியில், ரதல்ல குறுக்கு
பாதையில் வைத்து
குறித்த லொறி
வீதியை விட்டு
விலகி குடைசாய்ந்து
விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில்
ஏற்பட்ட இயந்திர
கோளாரே விபத்துக்கு
காரணம் என
ஆரம்பகட்ட விசாரணைகளில்
இருந்து தெரியவருகிறது.
லொறியில்
சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும்,
சாரதி சிறு
காயங்களுக்கு இலக்காகியுள்ளதுடன், உதவியாளர்
படுகாயங்களுக்கு உள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த
லொறியில் இருந்த
கால்நடை தீணிகளை
பிரதேச மக்களின்
உதவியுடன் மற்றுமொரு
லொறிக்கு ஏற்றி,
அதனை உரிய
இடத்தில் சேர்க்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.