கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின்
தலைவராக பேராசிரியர் ஜயசிங்கம் நியமனம்
கிழக்கு
மாகாண பொதுச்
சேவை ஆனைக்குழுவின்
தலைவராக கிழக்கு
பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப
வேந்தர் பேராசிரியர்
தங்கமுத்து ஜயசிங்கம் கிழக்கு மாகாண ஆளுநர்
கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு
மாகாண பொதுச்
சேவை ஆனைக்குழு
நியமனங்களை வழங்குதல் , இடம் மாற்றங்களை செய்தல்
, உயர்பதவிகளுக்கு நபர்களை நியமித்தல்
உட்பட அரச
சேவைகளுடைய சகல நியமனங்களுக்கும் பொறுப்பான அதி
உயர்சபையாகும் இந்த சபையின் தலைவராக பேராசிரியர்
தங்கமுத்து ஜயசிங்கம் கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர்
தங்கமுத்து ஜயசிங்கம் மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை
சேர்ந்தவர்
கிழக்கு
பல்கலைக்கழகத்தில் உப வேந்தராக
இருந்து கடமையாற்றிய
நீண்ட கால
அனுபவமிக்கவர் , அவரை கிழக்கு ஆளுநர் அவர்கள்
ஆணைக்குழுவின் தலைவராக நியமித்துள்ளார்.
இதுவரைகாலமும்
இந்த ஆணைக்குழுவின்
தலைவராக கொழும்பை
சேர்ந்த மேன்முறையீட்டு
நீதிமன்ற நீதிபதி
பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க தலைவராக இருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.