சாய்ந்தமருதின் பூர்வீகக் குடும்பங்கள்
-------------------------------------------
இலங்கையில்
கிழக்கு மாகாணத்தில்
கி.பி.8ம் நூற்றாண்டிலிருந்து
முஸ்லிம்கள் காணப்பட்டனர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக்காலத்திலிருந்து
சாய்ந்தமருதுவிற்கும் முஸ்லிம்கள் தேச
சஞ்சாரிகளாகவும் வியாபாரிகளாகவும் சன்மார்க்கத்தை
போதிப்பவர்களாகவும் வந்து செல்பவர்களாகக்
காணப்பட்டனர்.
ஆயினும்
12ம் நூற்றாண்டு
வரை இவர்கள்
இங்கு குடிபதியாக
வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
12ம்
நூற்றாண்டில் பொலனறுவயில் ஆட்சி செய்த மன்னன்
நிஸ்ஸங்க மல்லா
முஸ்லிம்களுக்கு கரைவாகுவைப் பரிசாகக்கொடுத்து
இங்கு பள்ளிவாசல்கள்
கட்டவும் அனுமதி
கொடுத்தான் எனவும் இதன் பின்னரே முஸ்லிம்கள்
இங்கு குடிபதியாக
வாழ ஆரம்பித்தனர்
என்பதுவும் வரலாறு.
16ம்
நூற்றாண்டில் போத்துக்கேயரினால் இம்சைக்குள்ளான
முஸ்லிம்கள் கண்டி மன்னன் செனரத்தினால் இப்பிரதேசத்தில்
குடியேற அனுப்பப்பட்டதனால்
மேலும் பல
குடும்பங்கள் இங்கு குடிபதியாக வாழத்தொடங்கினர்.
17ம்
நூற்றாண்டில் யெமனைச் சேர்ந்த அஸ்கொலியா அவ்லியா
அவர்கள் இவ்வூரில்
குடிபதியாக வாழ்ந்து தஃவா பணிசெய்து பெரிய
பள்ளிவாசலின் நிர்வாகத்திற்கும் பொறுப்பாக
இருந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரின் மக்களும்
அவர்களுக்குப்பின் அவர்களின் வழித்தோன்றல்களுமே
அண்மைக்காலம் வரை (1980 வரை) இப்பள்ளிவாசலின் நிர்வாகத்திற்குப்
பொறுப்பாகவிருந்தனர்.
18ம்
நூற்றாண்டில் கண்டி மன்னன் நரேந்திர சிங்கனின்
மகன் ஒருவன்
இஸ்லாத்தைத் தழுவி (அப்துர் ரஹ்மான்) இங்கு
திருமணம் செய்து
குடிபதியாக வாழ்ந்ததாகவும் அவரின் பிள்ளைகள் இங்கு
வாழ்ந்த ஏனைய
குடும்பங்களுக்குள் திருமணம் முடித்து
வாழ்ந்தாகவும் கூறப்படுகின்றது.
19ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1818) வெல்லஸ்ஸ
கலவரத்தின் பின் அங்கு வாழ்ந்த பல
குடும்பங்கள் இங்கு இடம் பெயர்ந்து வந்து
வாழத்தொடங்கின. அவற்றில் கொட்டபோவ காரியப்பர் குடும்பம்,
வெல்லையார் குடும்பம், முகாந்திரம் குடும்பம், முஹல்லம்
ஆதம் லெவ்வை
குடும்பம் என்பன
அடங்கும்.
இவர்களைத்
தொடர்ந்து பலர்
யாழ்பாணம் உட்பட
வேறு பல
பிரதேசங்களிலிருந்தும் வந்து இங்கு
குடிபதியாக வாழ ஆரம்பித்தனர். இவர்களில் சேவுகனார்
குடும்பம், முத்தலிபுப் பரிகாரி குடும்பம் என்பன
அடங்கும்.
மேற்கூறப்பட்ட
குடும்பங்களுக்குப் புறம்பாக மேலும்
பல குடும்பங்கள்
இங்கு பூர்வீகமாக
வாழ்ந்துள்ளன/ வாழ்கின்றன. அவையாவன:-
சாய்ந்தமருதின்
வடக்கில் காணப்படும்
குடும்பங்கள்:
சொக்கனாப்
போடியார் குடும்பம்
லெவ்வைத்தம்பி
போடியார் குடும்பம்
மீராலெவ்வைப்
போடியார் குடும்பம்
முகம்மதுத்தம்பிப்
போடியார் குடும்பம்
போடிர
தத்தி குடும்பம்
போடிப்புள்ள
குடும்பம்
சுலகிப்
போடியார் குடும்பம்
மூத்தம்பிப்
போடியார் குடும்பம்
சாய்ந்தமருதின்
கிழக்கில்காணப்படும் குடும்பங்கள்:
காரியப்பர்
வ.வி.
குடும்பம்
மாலையர்
குடும்பம்
தும்பர்
குடும்பம(முகம்மது
தம்பி வ.வி)
மந்தையர்
குடும்பம்
மீதுப்பிள்ளை
குடும்பம்(பாவா
மாஸ்டர் மாமா)
தக்கர்ர
வெள்ளையர் குடும்பம்
வெளிச்சருடைய
குடும்பம்
கோசு
ராசா குடும்பம்
மூளைக்காரர்
குடும்பம்
தோம்புதோர்
மஜீட் குடும்பம்
வெள்ளக்குட்டி
ஆலிம் குடும்பம்
நல்லகாலத்தார்
குடும்பம்
வெடிக்காரர்
குடும்பம்
குருநாகலையார்
குடும்பம்
கண்டியார்
குடும்பம்
கொழும்பார்
குடும்பம்
சாய்ந்தமருதின்
மத்தியில் காணப்பட்ட
குடும்பங்கள்:
தோம்புதோர்
குடும்பம்
சீனி
விதானை குடும்பம்
முஸ்தபா
லெவ்வைப் போடி
குடும்பம்
முஆதுப்
போடி குடும்பம்
முதலிப்
பொலிஸ் விதானை
குடும்பம்
அக்பர்
போடி குடும்பம்
உயிர்
போடி குடும்பம்
கிரான்
குருவி வட்டான
குடும்பம்
சுக்கிரியார்
குடும்பம்
மதார்
சாஹிப் போடி
குடும்பம்
பெரிய
ஆலிம்(சேகு
அகமது) குடும்பம்
சின்ன
ஆலிம் குடும்பம்
பெரிய
லெவ்வை(முகல்லம்
மீராலெவ்வை குடும்பம் (சீனி ஆலிம் தகப்பன்)
சின்ன
லெவ்வை குடும்பம்.(காசிம் மாஸ்டர்
தகப்பனின் மூத்தப்பா)
புலவன்
ஆலிம் குடும்பம்
மேலும்
பல குடும்பங்கள்
எதிர்காலத்தில்
சாய்ந்தமருதில் வாழ்ந்த/வாழும் குடும்பங்களை அட்டவணைப்படுத்தி
ஆவணமாக்குவதற்கு சாய்ந்தமருது சிரேஷ்ட பிரஜைகள் ஒன்றியம்
விரும்புகின்றது. இதற்கு மேலும் பல குடும்பங்களின்
ஐந்துக்கு மேற்பட்ட
தலைமுறைத் தகவல்கள்
தேவைப்படுகின்றன. அத்துடன் எல்லாக் குடும்பங்களினதும் பூரணமான கிளைகளின் விபரங்களும் அக்கிளைகளை
இனம் காணத்
தற்கால முக்கியஸ்தர்களின்
பெயர் விபரமும்
தேவை.
குடும்பங்களின்
வரலாற்றை அறிவதன்
மூலம் நமது
உறவினர்களை அறியலாம். அதன்மூலம் குடும்பங்களுக்குள் ஒற்றுமையை வலுப்படுத்தலாம்.
குடும்பங்கள்
ஒற்றுமையாக இருந்தால் ஊர் ஓற்றுமையாக இருக்கும்.
ஊர் ஒற்றுமையாக
இருந்தால் இனங்களுக்கிடையேயும்
பிரதேசங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் காணப்படும்.
இதன் மூலம்
நாட்டில் சமாதானமும்
நல்லுறவும் காணப்படும்.
Dr.M.I.M.Jameel
President
Council of Senior Citizens
Sainthamaruthu
Whatsap:0773 725 625
Email: mimjam@gmail.com
For your comments & inputs
0 comments:
Post a Comment