பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீவிர நடவடிக்கை
சட்டத்தரணி குழு ஒன்று ஹொரவொப்பொத்தானைக்கு
செல்லவுள்ளதாகவும் தெரிவிப்பு
அநுராதபுரம்
- ஹொரவொப்பொத்தான - கிரிலாகல தூபியின்
மீது ஏறி
புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு
அநுராதபுர சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டுள்ள
பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸ் தீவிர
நடவடிக்கை எடுத்து
வருகின்றது.
அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் சட்டத்தரணி குழு ஒன்று கட்சியின்
சட்டப்பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஸ்தி ஹபீப்
தலைமையில், ஹொரவொப்பொத்தானைக்கு செல்லவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை
விடுதலை செய்வதற்கான
சட்ட ஏற்பாடுகள்
குறித்து சட்டத்தரணி
குழு நடவடிக்கையை
மேற்கொள்ளவுள்ளது.
குறித்த
மாணவர்களின் விடுதலை குறித்து தொல்பொருள் திணைக்களத்துடன்
சம்மந்தப்பட்ட கலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாச
உடன், அமைச்சர்
ரிசாத் பதியுதீன்
தொலைபேசி வாயிலாக
ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதுடன்,
நேரில் சந்தித்து
விடுதலைக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு
வருடத்திற்கு முன்னர் நடந்த இந்த சம்பவம்
மீண்டும் முகநூலில்
பகிரப்பட்டதனாலயே இந்த விடயம் தற்போது பூதாகரமாக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
வேண்டுமென்று இவ்வாறான செயலை மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்ட தூபிக்கு அருகில் இது
தொடர்பான எந்த
வகையான அறிவுறுத்தல்
பலகைகளும் போடப்படவில்லை.
எனவே அறியாத்தனமாக
நடந்த இந்த
விடயத்தை கருணை
கொண்டு மன்னித்து
மாணவர்களை விடுதலை
செய்யவேண்டும் என “அமைச்சர் ரிசாத் பதியுதீன்
அமைச்சர் சஜித்துடன்
தொலைபேசியின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment