இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக
உடன்படிக்கையில் சில திருத்தங்களை செய்ய
எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறிய கருத்து
நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம்
-    சர்வதேச அரசியல் தொடர்பான நிபுணர்கள் தெரிவிப்பு



இலங்கை - சிங்கப்பூர் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் சில திருத்தங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூர், பிரதமர் லீ ஷியெங் லூன் முன்னிலையில் கூறியது நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் என சர்வதேச அரசியல் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தூரநோக்கம் கருதாமல் ஜனாதிபதியின் இப்படியன செயற்பாடுகள் நாட்டை சர்வதேச சமூகத்திற்கு மத்தியில் மேலும் அவமதிப்புக்கு உள்ளாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை கூறியிருந்தார்.

இலங்கை - சிங்கப்பூர் இடையிலான உடன்படிக்கையை உருவாக்கும் போது இலங்கை தரப்பில் நடந்துள்ள குறைப்பாடுகள் காரணமாக அதில் திருத்தங்களை செய்ய உள்ளதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன தான் இலங்கையின் அரச தலைவர் என்று மறந்து விட்டு இதனை கூறியுள்ளதாகவும் இலங்கை என்பது எவ்விதமான உரிய கொள்கையின் அடிப்படையில் இருந்து சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்படுத்துவது சம்பந்தமாக அடிப்படை அறிவற்ற நாடு என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச அரசியல் தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ஜனாதிபதி சிறிசேன தனது சிங்கப்பூர் விஜயத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று வெளியிடும் கருத்துக்கள் அரசியல் பிளவை காட்டுவதாகவும் இது சிங்கப்பூர் ஆட்சியாளர்களுக்கு தெரியாது என ஜனாதிபதி நினைப்பாராயின் ஜனாதிபதியும் அவரது ஆலோசகர்களும் செய்யும் தவறு எனவும் சர்வதேச அரசியல் தொடர்பான நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி தனது சிங்கப்பூர் விஜயத்தின் போது எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர மற்றும் மொஹான் லால் கிரேரு ஆகியோரை அழைத்துச் சென்றமையானது இலங்கையுடன் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களின் சந்தேகம் அதிகரிக்கவும் காரணமாக அமையும் என சர்வதேச அரசியல் தொடர்பான நிபுணர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top