ஷில்ப சுரக்ஷா என்ற பெயரிலான
புதிய காப்புறுதித் திட்டம் விரைவில்
அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு

கைப்பணிக் கலைஞர்களின் நன்மை கருதி ஷில்ப சுரக்ஷா என்ற பெயரிலான புதிய காப்புறுதித் திட்டத்தை அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதற்குரிய திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, அமுலாக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

ஷில்ப அபிமானி 2018 என்ற பெயரிலான கைப்பணி விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். நாடெங்கிலும் ஒரு இலட்சத்திற்கு மேலானோர் கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top