மஹிந்தவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஸ
இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஸ
இன்றைய தினம்
திருமண பந்தத்தில்
இணைந்து கொண்டார்.
அவரது
நீண்ட கால
காதலியான டட்யான
லீ என்பவரையே
பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் ரோஹித ராஜபக்ஸ திருமணம்
செய்துள்ளார்.
ராஜபக்ஸவின்
குடும்ப கிராமமான
வீரக்கெட்டியவில் ரோஹிதவின் திருமண நிகழ்வுகள் தற்போது
நடைபெற்று வருகின்றன.
இந்த
திருமண வைபவம்
வேறு அரசியல்வாதிகளின்
வாரிசுகளின் திருமணம் போன்று 5 நட்சத்திர ஹோட்டல்களில்
நடத்தப்படவில்லை. மிகவும் எளிமையான முறையில் வீரக்கெட்டிய
கிராமத்தில் மெதமுல வீட்டில் திருமணம் நடைபெற்று
வருகிறது.
திருமணத்திற்கு
வழங்கப்படும் உணவுகள் உள்ளூர் உணவுகளாகும். அயல்
வீட்டவர்களினாலேயே திருமணத்திற்கான உணவுகள்
தயாரிக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு
பகிரங்கப்படுத்தாமல் மெதமுலன கிராம
மக்களுக்கு மாத்திரம் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு
வருபவர்களுக்கு ரணவரா இலைகள் மற்றும் விளாம்பழம்
கொண்டு தயாரிக்கப்பட்ட
பாணமே வழங்கப்பட்டுள்ளது.
மட்பாண்டங்களை கொண்டு இந்த திருமண உணவுகள்
சமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விசேட
அம்சமாகும்.
இந்த
திருமணத்திற்கு எவ்வித இறைச்சி வகைகளும் பயன்படுத்தாமல்
இருப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர்.
திருமண
அலங்கரிப்புகள் உட்பட அனைத்து அலங்கரிப்புகளும் சுற்றாடலுக்கு நெருக்கமான பொருட்கள் கொண்டே
தயாரிக்கப்படவுள்ளது.
அத்துடன்
இந்த திருமண
வைபவத்தில் எவ்வித மதுபானங்களும் பயன்படுத்தாமல் மிகவும்
எடுத்துக்காட்டான ஒரு திருமணமாக நடத்தப்படவுள்ளது.
கடந்த
ஆட்சியின் போது
பாரிய நிதி
மோசடியில் ஈடுபட்டதாக
ராஜபக்ஸ குடும்பத்தினர்
மீது பல்வேறு
குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த
குற்றச்சாட்டின் கீழ் மஹிந்தவின் புதல்வர்களான நாமல்
ராஜபக்ஸ, யோசித்த
ராஜபக்ஸ சிறைக்கு
சென்று வந்திருந்தனர்.
இந்நிலையில்
மஹிந்தவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஸவின்
திருமணம் ஆடம்பரம்
இன்றி, மிகவும்
எளிமையான முறையில்
நடத்தப்படுகின்றமை நாட்டு மக்களுக்கு
பெரும் ஆச்சரியத்தை
ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.