இலங்கை வரலாற்றில் மீட்கப்பட்ட
அதிகூடிய போதைப்பொருள்!
பங்களாதேஷில் ஐவர் கைது



இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஐந்து பேர் பங்களாதேஷில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் வெவ்வேறான சந்தர்ப்பங்களின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

26 வயதான இமாம் தானியா, 23 வயதான அஃப்சானா மிமி, 26 வயதான சல்மா சுல்தானா, 28 வயதான ஷேக் முகம்மது பத்ஹான் (பர்வீஸ்) மற்றும் 29 வயதான ருஹுல் அமீன் ஆகியோர் டாக்கா விமான நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து பெருந்தொகையான போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி கொழும்பு புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் 272 கிலோ ஹெரோயின் மற்றும் 5 கிலோ கொக்கெயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top