சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களின்
பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதி

சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும், உதவவும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் இன்று சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

நுகர்வோருக்கு அரிசியை விற்பனை செய்து வந்த கூட்டுறவுச் சங்கங்களின் தொழிற்பாடு மேலும் விஸ்தரிக்கப்பட்டு, சந்தையில் அரிசியை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொள்வது தொடர்பாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அமைச்சரிடம் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தாம் எதிர்நோக்கும் கஷ்டங்களை எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களின் விமோசனத்தை கருத்திற் கொண்டு நாட்டின் ஐந்து மாகாணங்களிலுள்ள எட்டு கூட்டுறவுச் சங்கங்களில் அங்கம் வகிக்கும் வகையில் சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுத் துறையுடன் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

அது மாத்திரமின்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சம்மேளனத்துடனும், இந்த சிறிய ஆலை உரிமையாளர்கள் இணைக்கப்பட்டிருந்த போதிலும் தாங்கள் கடன்களை பெறுவதில் பல்வேறு தடைகள் இருந்து வந்ததை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்தோடு கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி, இயற்கை அனர்த்தம் ஆகியவற்றின் காரணமாக நாட்டின் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டதனால் தமது ஆலைத் தொழிலும் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதையும் அவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அத்துடன் கடந்த காலங்களில் தாங்கள் பெற்ற கடன்களை உடனடியாக வங்கிகளுக்கு மீள செலுத்த முடியாதிருந்ததாகவும் எனவே புதிதாக கடன்களை வழங்க ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமே தமது தொழிலை மீண்டும் இலாப கரமானதாக்கி கடன் சுமைகளையும் தீர்க்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கூட்டுறவுச் சம்மேளனத்துடன் உள் வாங்கப்பட்ட ஆலை உரிமையாளர்களை உள்வாங்கி அரிசியை சந்தைக்கு விநியோகிக்கும் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top