2016 - 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை

எழுதி சித்தியடைந்த மாணவர்களுக்கு
தேசிய  கல்வியியற் கல்லூரிகளுக்கு நுழையும் வாய்ப்பு
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய 
இறுதித் திகதி பெப்ரவரி 15 ஆகும்.


தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும், மூன்று வருட கால, சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பாடநெறிக்கான விண்ணப்பங்கள் இன்று வெளியாகியுள்ளது.

கல்வியற் கல்லூரியின் ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி பெப்ரவரி 15 ஆகும்.இரு வருடங்களின் பெறுபேறுகளுக்கு அமைய தலா நான்காயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். நாட்டிலுள்ள 19 கல்வியியல் கல்லூரிகளுக்காகவும் எண்ணாயிரம் பேர் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

விண்ணப்பதாரிகள் ஜனவரி முதலாம் திகதியன்று 25 வயதுக்கு மேற்படாதவர்களும் சமய பாடநெறிக்காக விண்ணப்பிக்கும் மதகுருமார்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள் 30 வயதுக்கு மேற்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top