40000 வீடுகளை
நிர்மாணிப்பதற்கு
நாம் நடவடிக்கைஎடுத்துள்ளோம்.
கொழும்பு துறைமுக நகரம்,
நிதி நிலையமாக மாற்றியமைக்கப்படும்.
40000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நாம் நடவடிக்கையெடுத்துள்ளோம் கொழும்பு
தெற்கு துறைமுகமானது
வடக்கு துறைமுகம்
மற்றும் மத்தள
வரை அபிவிருத்தி
செய்யப்படும் என்று பிரதமர் பிரதமர் ரணில்
விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆயிரத்து
64 மில்லியன் ரூபா செலவில் தெமட்டகொடயில் நிர்மாணிக்கப்பட்டு
வரும் சியபத்-செவன மாடிவீட்டுத்
திட்டத்தில் 264 வீடுகளை மக்கள் பாவனைக்காக கையளிக்கும்
நிகழ்வில் பிரதமர்
உரையாற்றினார்.
நேற்று
இடம்பெற்ற இந்த
நிகழ்வில் ஐக்கிய
தேசியக் கட்சி
உள்ளிட்ட ஜனநாயகத்தை
மதிக்கும் அனைத்து
அரசியல் கட்சிகளுடனும்
சேர்ந்து ஜனநாயக
ஐக்கிய தேசிய
முன்னணியை எதிர்வரும்
2 வாரங்களுக்குள் கட்டியெழுப்புவதாகவும் பிரதமர்
குறிப்பிட்டார்.
நகர
அபிவிருத்தி அதிகாரசபையால் நடைமுறைப்படுத்தப்படும்
"நகர மறுமலர்ச்சி"
செயற்றிட்டத்தின் கீழ் தெமட்டகொட பகுதியில் அமைக்கப்பட்ட
"சியபத் செவன"அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின்
இரண்டாம் கட்டம்
நேற்றைய தினம்
மக்களிடம் கையளிக்கப்பட்டது.
கொழும்பில்
அதிகமான வீடுகளை
அமைத்த பெருமை
எமது அரசாங்கத்தையே
சாரும். அத்துடன்
எதிர்வரும் வருடத்தில் மேலும் 40000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு
நாம் நடவடிக்கையெடுத்துள்ளோம்.
அதுபோலவே கொழும்பு
துறைமுக நகரத்தை
நிதி நகரமாக
மாற்றி, இந்து
சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக கொழும்பு நகரத்தை
மாற்றுவதே எமது
நோக்கமாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment