இலங்கைக்கான புதிய அவுஸ்ரேலிய
தூதுவராக
டேவிட் ஹொலி
நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கைக்கான,
அவுஸ்ரேலியாவின் புதிய தூதுவராக டேவிட் ஹொலி
நியமிக்கப்பட்டுள்ளார் என, அவுஸ்ரேலிய
வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் பைன் அறிவித்துள்ளார்.
இலங்கைக்கான
அடுத்த தூதுவராக
நியமிக்கப்பட்டுள்ள டேவிட் ஹொலி,
அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வணிக திணைக்களத்தின்,
சிரேஷ்ட அதிகாரியாவார்.
இதற்கு
முன்னர் இவர்
சென்னை, புதுடெல்லி,
சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் அவுஸ்ரேலிய தூதரக
அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
கடந்த
2016ஆம் ஆண்டு
தொடக்கம் இலங்கையில்
அவுஸ்ரேலிய தூதுவராகப் பணியாற்றிய பிரைஸ் ஹட்சிசன்
தனது பதவிக்காலம்
முடிந்து நாடு
திரும்பும் நிலையிலேயே புதிய தூதுவராக டேவிட்
ஹொலி அறிவிக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment